December Movies: டிசம்பர் மாதம் வெளியாகும் மிக முக்கியமான படங்கள்!

December Month Releasing Movies: ஷாருக்கானின் டங்கி முதல் பிரபாஸ் சலார் வரை பெரிய ஹீரோக்களின் படங்கள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2023, 04:40 PM IST
  • சலார் படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது.
  • ஷாருக்கானின் டன்கி படமும் அதே தேதியில் வெளியாகிறது.
  • பாக்ஸ் ஆபிஸ் மோதலை எதிர்கொள்கிறது.
December Movies: டிசம்பர் மாதம் வெளியாகும் மிக முக்கியமான படங்கள்!  title=

2023 ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய பல விஷயங்கள் நடைபெற்றது.  மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் 2023ம் ஆண்டில் வெளியானது.  ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதத்தில் இன்னும் சில பெரிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைக்கக்கூடும். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ளது.  டிசம்பரில் வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் சில திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ.. பதறிப்போன பாலிவுட், பாடாய் படுத்தும் Deep Fake

அனிமல் - டிசம்பர் 1

கபீர் சிங்கிற்குப் பிறகு, சந்தீப் ரெட்டி வங்கா மீண்டும் ஹிந்தியில் எடுத்துள்ள படம் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.  இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிமல் கபூர், பாபி தியோல் மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் அனிமல் படத்தில் நடித்துள்ளனர்.  சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  

ஹாய் நன்னா - டிசம்பர் 7

தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக தமிழ், கன்னடா, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் படம் ஹாய் நன்னா. நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். முன்னதாக வெளியான இந்த படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.  இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  

டன்கி - டிசம்பர் 22

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது படம் டன்கி. மேலும் மூன்றாவது முறையாக பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ள உள்ளார். பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் 1000 கோடியை வசூல் செய்தது.  இந்த படம் 3 இடியட்ஸை விட நூறு மடங்கு சிறந்தது என்று ஏற்கனவே படத்தை பற்றிய ரிவியூ வெளியாகி உள்ளது.  விக்கி கௌஷல் கேமியோ தோற்றத்தில் நடிக்க மற்றும் டாப்ஸி பண்ணு ஷாருக்கான் ஜோடியாக நடித்துள்ளனர். டிசம்பர் 22ம் தேதி சலார் படத்துடன் வெளியாக உள்ளது.

சலார் - டிசம்பர் 22

சலார் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. ஷாருக்கின் டன்கி படத்துடன் வெளியாக உள்ளது சலார். கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பிருதிவிராஜ் நடித்துள்ளனர். சலார் படத்தின் டிரெய்லர் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  கேஜிஎப் படத்துடன் இப்படத்தின் கதை இணையுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.  இப்படம் பற்றி பேசிய பிரசாந்த் நீல் சலார் படத்தின் முக்கிய மைய கரு இரு நபர்களின் நட்பு பற்றியது. நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறினால் என்ன நடக்கும் என்பதே இதன் கதை என்று கூறி உள்ளார். பிரபாஸின் நண்பனாக பிருதிவிராஜும்,  காதலியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பருத்திவீரன் பஞ்சாயத்து: கொளுத்திப்போட்ட ஞானவேல் ராஜா, கொந்தளித்த நடிகர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News