ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ.. பதறிப்போன பாலிவுட், பாடாய் படுத்தும் Deep Fake

நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோலைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 28, 2023, 06:29 AM IST
  • ஆலியா பட்டின் டீப்ஃபேக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
  • அந்த வீடியோவில் நடிகரின் மார்பிங் செய்யப்பட்ட முகம் வேறொரு பெண்ணின் முகத்தில் பொருட்கப்பட்டுள்ளது.
  • இந்த சர்ச்சைக்கு ஆலியா பட் இன்னும் பதிலளிக்கவில்லை.
ஆலியா பட்டின் படுக்கையறை வீடியோ.. பதறிப்போன பாலிவுட், பாடாய் படுத்தும் Deep Fake title=

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் மற்றும் கஜோலைத் தொடர்ந்து தற்போது, ஆலியா பட்டின் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆலியா பட்டின் முகத்தை மார்பிங் செய்த வீடியோ அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பரவி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஓர் மனிதனை போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் அனுமதிக்கிறது. மனிதனை போலவே ஓர் விஷயத்தை கணிப்பது மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, இவை தொடர்பான அதிக அளவிலான தகவல்களை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கலாம். கணினியை கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும், தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம். தற்போது இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சினிமா பிரபலங்களுக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதனைப்பயன்படுத்தி எந்த ஒரு வீடியோவையும் ஈஸியாக மார்பிங் செய்ய முடியும் என்பதால், கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோக்கள் உலாவி வருகிறனது.

மேலும் படிக்க | புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ்! இயக்குனர் யார் தெரியுமா?

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ:
அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ (Celebrities DeepFake Vide) வைரலானது. இதற்கு திரையுலகமே ஒன்றுகூடி இது போன்ற செயலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இதனை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு, டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், டீப் ஃபேக் வீடியோக்கள் உலாவுவது குறையவில்லை என்றே தான் கூற வேண்டும்.

டீப் ஃபேக் வீடியோவுக்கு இரையான நடிகை கத்ரீனா கைஃப்:
இதனிடையே ராஷ்மிகாவை (Rashmika Mandanna) தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப்பின் (Katrina Kaif) டீப் ஃபேக் வீடியோ வைரலானது. இதன் மூலம் அவரை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர். 

ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ: 
இந்நிலையில் தற்போது இவர்களின் வருசையில் புதிதாக பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் உடலில் ஆலியாவின் முகம் வைக்கப்பட்டுள்ளது. இது டீப் ஃபேக் வீடியோ என தெரியாமல் சிலர் உண்மை என நினைத்து பலர் இந்த வீடியோவை பகிரத்தொடங்கி உள்ளனர், இதன் மூலம் இந்த வீடியோ தற்போது தீயாய் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற செலுக்கு கண்டனம் தெரிவித்த திரையுலக பிரபலங்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர், மேலும் இது ஒரு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது என்றும் புலம்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை கனகா! ரசிகர்கள் கவலை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News