லோகேஷ் கனகராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படம் வித்தைக்காரன். தேஜாவு படத்தை தயாரித்திருந்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வித்தைக்காரன் படத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், மதுசூதன் ராவ், ஜான் விஜய், ஜப்பான் குமார், பாவில் நவகீதன், சுப்பிரமணியம் சிவா, ஆசிப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனரான வெங்கியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார்.
மதுசூதனன், ஆனந்த்ராஜ் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஏர்போர்ட் மற்றும் துறைமுகம் வழியாக தங்கம், வைரம் போன்றவற்றை கடத்தி வருகின்றனர், இதனை தெரிந்து கொள்ளும் வித்தைக்காரணான சதீஷ் அவர்களுடன் கூட்டு சேர்ந்து 25 கோடி மதிப்பு உள்ள வைரத்தை எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த வைரம் ஏர்போர்ட் ஆபீசரிடம் மாட்டிக் கொள்கிறது, இதனை எப்படி சதீஸ் கொள்ளை அடிக்கிறார் என்பதே வித்தைக்காரன் படத்தின் கதை. காமெடியனாக சினிமாவில் அறிமுகமான சதீஷ் தற்போது கதையின் நாயகனாக வளர்ந்துள்ளார். வித்தைக்காரன் படத்தில் நிறைய இடங்களில் தனது நடிப்பால் ரசிக்க வைக்கிறார். பெண் பத்திரிகையாளராக வரும் சிம்ரன் குப்தாவின் கதாபாத்திரம் நன்றாக அமைக்கப்பட்டு இருந்தது, அவரின் அறிமுக கட்சியை விறுவிறுப்பாகவும் அசத்தலாகவும் இருந்தது.
Surrounded with excellent reviews from audience & film critics. An unique heist film blended with ample FUN moments. #Vithaikkaaran Running Successfully @actorsathish #SimranGupta @vijaywcf @Venki_dir @Vairamuthu @vbrcomposer @iamyuvakarthick @editorsiddharth @Gdurairaj10… pic.twitter.com/Nga7pkCw28
— White Carpet Films (@WCF2021) February 24, 2024
வழக்கம்போல ஆனந்தராஜ் காமெடியில் கலக்கியுள்ளார், அவருக்கும் ஜப்பான் குமாருக்கும் இடையே நடக்கும் காமெடி காட்சிகள் நிறைய இடங்களில் சிரிப்பை வர வைக்கிறது. சதீஷை முதல் முறையாக பார்க்கும் நடக்கும் காட்சி, டாக்டர் முன் நடக்கும் காட்சிகள் போன்றவை ரசிக்கும் படி இருந்தது. டபுள் மீனிங் வசனங்கள் இல்லாமல், தேவையில்லாத சண்டை காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக வித்தைக்காரன் எடுக்கப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது.
நிறைய காட்சிகள் புதுமையாக எடுக்கப்பட்டிருந்தது, அதற்கு அறிமுக இயக்குனர் வெங்கிக்கு தனி பாராட்டுக்கள். நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த கதை ஒரு சில இடங்களில் மட்டும் புரியாமல் உள்ளது. ஏர்போர்ட்டுகள் நடக்கும் சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. கதையாக சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும் படமாக இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து இருந்திருக்கலாம். விபிஆர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு இருந்தது. வித்தைக்காரன் என்ற படத்தின் டைட்டிலிக்கு ஏற்றவாறு இன்னும் நிறைய வித்தைகளை படத்தில் சேர்த்து இருக்கலாம்.
மேலும் படிக்க | ஜீவன் நடித்துள்ள பாம்பாட்டம் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ