சீதா ராமன் அப்டேட்: பெயிலில் வெளியே வரும் சீதா.. அர்ச்சனாவை ஏற்றி விட்ட கல்பனா

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 30, 2024, 01:59 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • ராமுக்கு பதிலடி கொடுக்கும் சீதா.
  • சீதாவுக்கு பெயில்.
சீதா ராமன் அப்டேட்: பெயிலில் வெளியே வரும் சீதா.. அர்ச்சனாவை ஏற்றி விட்ட கல்பனா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சேது, துரை, மீரா ஆகியோர் சீதாவை பெயிலில் எடுக்க வெளியே வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ராமுக்கு பதிலடி கொடுக்கும் சீதா

அதாவது, ராம் ஜெயிக்குக்குள் இருக்கும் சீதாவை பார்த்து சாப்பிட சொல்லி பேச அவள் மறுப்பு தெரிவிக்கிறாள், உங்களுடைய விசாரணை தப்பான வழியில் போயிட்டு இருக்கு எனவும் உண்மை தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க எனவும் பதிலடி கொடுக்கிறாள். மேலும் பாஸ் என சொல்லி அழைத்து விட்டு சாரி கேட்டு சார் என மாற்றி கொள்கிறாள். 

சீதாவுக்கு பெயில்

அடுத்ததாக சீதாவை பெயில் கேஸ் விசாரணைக்காக கோர்ட்டிற்கு அழைத்து வருகின்றனர். ராம் பெயில் கிடைக்காது என்று சொல்ல சீதாவுக்கு நீதிமன்றம் பெயில் கொடுக்க ராம் மூக்குடைந்து நிற்கிறான். இங்கே வீட்டிற்கு வரும் கல்பனா அர்ச்சனாவை சந்தித்து மகாவை கொன்றதற்காக பணத்தை கேட்ட முதலில் மறுக்கும் அர்ச்சனா பிறகு பணத்தை போட்டு விட செல்வி இதை கவனித்து விடுகிறாள். 

மேலும் படிக்க | Vijay: முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்! கடைசி படம் இதுதான்..இயக்குநர் யார் தெரியுமா?

மேலும் கல்பனா சீதாவுக்கு பெயில் கிடைத்த விஷயத்தை சொல்லி வீட்டிற்கு வந்தால் அவளை நீ உள்ளவே விட கூடாது என ஏற்றி விடுகிறாள். இவர்கள் பேசி கொண்டிருக்கும் நேரத்தில் சீதா ராமுடன் ஜீப்பில் வந்து இறங்குகிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஜோதிகா - சூர்யா விவாகரது செய்வது உண்மையா? இதோ லேடஸ்ட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News