சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அஜித்? வெளியான சஸ்பென்ஸ்

அண்மையில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கராவுடன் நடிகர் அஜித் இணைய வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 27, 2022, 06:32 PM IST
  • அஜித் - சுதா கொங்கரா புதிய படம்
  • விரைவில் கைகோர்க்க இருப்பதாக தகவல்
  • விக்னேஷ் சிவன் படத்துக்கு பிறகு வாய்ப்பு
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அஜித்? வெளியான சஸ்பென்ஸ் title=

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம். அண்மையில் 5 தேசிய விருதுகளையும் பெற்று அசத்தியது. இந்தப் படத்தை இயக்கிய சுதா கொங்கராவுக்கும் தேசிய விருது கிடைத்திருக்கும் நிலையில், அந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அந்தப் பணியில் சுதா கொங்கரா பிஸியாக இருக்கிறார். அந்தப் படத்துக்குப் பிறகு அவர் அடுத்ததாக இயக்கும் படம் எது? யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | "தி லெஜண்ட்" படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம்

அண்மையில் வெளியான தகவலின்படி, கேஜிஎப் 2 தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். அந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா அல்லது அஜித் ஆகியோரில் ஒருவரின் படத்தை சுதா கொங்கரா இயக்க இருக்கிறாராம். பேட்டி ஒன்றில் பேசும்போது, சூர்யாவுக்கு இப்போது நிறைய கமிட்மெண்டுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த கமிட்மெண்டுகள் முடித்த பிறகு காலம் கணியும்போது சூர்யாவுடன் மீண்டும் இணைய இருப்பதாக கூறியுள்ளார்.

அதேபோல் அஜித்துடன் எப்போது இணையப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த சுதா கொங்கரா, வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அவர், தற்போது சூட்டிங்கில் மீண்டும் கலந்து கொண்டு இருக்கிறார். அடுத்ததாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் நிறைவடைய 3 ஆண்டுகள் ஆகிவிடும். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்துடன் அஜித் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | எண்ணித்துணிந்த இயக்குநர்... வாழ்த்திய நட்பு படை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News