எண்ணித்துணிந்த இயக்குநர்... வாழ்த்திய நட்பு படை

எண்ணித்துணிக படத்தின் இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வனை பல இயக்குநர்கள் பாராட்டியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 27, 2022, 03:23 PM IST
  • எண்ணித்துணிக படத்தை வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார்
  • இவர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்
  • ஆகஸ்ட் 4ஆம் தேதி எண்ணித்துணிக படம் ரிலீஸாகிறது
 எண்ணித்துணிந்த இயக்குநர்... வாழ்த்திய நட்பு படை title=

சினிமா என்றாலே அது ஒரு மாய உலகம் என்று பேச்சு உண்டு. அதற்கேற்றபடித்தான் அந்த உலகமும் சுற்றிக்கொண்டிருக்கும். அந்த மாய உலகத்துக்குள் இருக்கும் இயக்குநர்கள் அனைவருமே தங்களை நிரூபிக்க ஓடிக்கொண்டிருப்பவர்கள். அதனால் யாருக்கும்  நின்று பேச நேரம் கிடைப்பதில்லை கிடைத்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், ஒரு அறிமுக இயக்குநருக்காக தமிழ் சினிமாவின் தற்கால இயக்குநர்களில் பலர் வந்து அவரை வாழ்த்தினர்.

இயக்குநர் வசந்த்த்திடம் உதவி இயக்குநராக இருந்து பல வருட போராட்டம், காத்திருப்புக்கு பிறகு எஸ்.கே. வெற்றிச்செல்வன் எண்ணித்துணிக என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஜெய், அதுல்யா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். Rain Of Arrows Entertainment தயாரித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்தது.

Jai

இந்தச் சூழலில் படமானது ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் கடந்த 23ஆம் தேதி நடந்தது.

Vetriselvan

இந்த விழாவில் வெற்றிச்செல்வனின் குருநாதரான இயக்குநர் வசந்த், க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி, டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், அடங்காதே பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி, ஆண்மை தவறேல் பட இயக்குநர் குழந்தை வேலப்பன், டோரா பட இயக்குநர் தாஸ் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மேடையில் பேசிய அத்தனை இயக்குநர்களும் வெற்றிச்செல்வனுடன் தங்களுக்கு இருந்த நட்பு, வெற்றிச்செல்வனின் திறமை உள்ளிட்டவைகளை பேசினர். அதுமட்டுமின்றி எண்ணித்துணிக பட இயக்குநரின் தாய் குறித்தும் பேசியது அவர்களுக்குள் இருக்கும் நட்பை பறைசாற்றும்விதமாக இருந்தது.

மேலும் படிக்க | அஜித்- 61 ஷூட்டிங் ஸ்பாட் லீக் வீடியோ வைரல்! - அதிர்ச்சியில் படக்குழு!

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றக்கூடும் என நினைக்கும் புது இயக்குநர் படை ஒன்று அறிமுக இயக்குநரை வாழ்த்தி பேசியதும், இத்தனை வருடங்கள் தோளோடு தோள் நின்று நட்போடு பேசியது கோலிவுட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News