சன் டிவி சீரியல் நடிக்களின் ஒரு நாள் சம்பள.. இவ்வளவு பேமண்டா? முழு விவரம்

Salary details of Sun TV serial celebrities: தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து சீரியல்களின் நடிகைகளின் உண்மையான பெயர், பிறந்த தேதி, சம்பளம் குறித்த முழுத்தகவல்களையும் பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2023, 09:40 AM IST
  • சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் விவரம்.
  • ரசிகர்களின் பேவரட் சேனலாக தற்போது சன் டிவி விளங்கி வருகிறது.
  • விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.
சன் டிவி சீரியல் நடிக்களின் ஒரு நாள் சம்பள.. இவ்வளவு பேமண்டா? முழு விவரம் title=

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும், அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் தற்போது எதிர்நீச்சல் சீரியல் பட்டித் தொட்டி என அனைத்து இடங்களிலும் ஹிட் சீரியலாக மாறியுள்ளது. இருப்பினும் இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புது புது சீரியல்களையும், ஏற்கனவே இருக்கு,ம் சீரியலில் சில மாற்றங்களை செய்து வருகின்றது.

ஒரே சீரியல் சன் டிவிக்கு கிடைத்த பொக்கிஷம்
அந்தவகையில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலை தவிர அடுத்தடுத்த வெற்றி தொடர்கலையும் குவித்து வருகின்றன. இதில் குறிப்பாக சுந்தரி, கயல், இனியா போன்ற தொடர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளன. வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை காண்பதில் ரசிகர்களின் ஆர்வம் இந்த சேனல்களை மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுக்க வைக்கின்றன. மேலும் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. இதனால் டிஆர்பியும் அதிகரிக்கிறது. அத்துடன் ரசிகர்களின் பேவரட் சேனலாக தற்போது விஜய் டிவிக்கு பதிலாக சன் டிவி விளங்கி வருகிறது.

மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!

சன் டிவி சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்
இந்நிலையில் தற்போது சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரம் விரிவாக வெளியாகி உள்ளது. எனவே அவர்களுக்கு ஒரு நாளைகக்கு எவ்வளவு பேமண்ட் வழங்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.

ஜனனி - மதுமிதா: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா தான் இந்த சீரியலின் முக்கிய கதாநாயகி ஆவார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறாராம். கன்னட நடிகை ஆக கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து தற்போது தமிழுக்கு வந்திருக்கும் ஜனனிக்கு இந்த சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சுந்தரி- கேப்ரில்லா செல்லஸ்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிகை கேப்ரில்லா செல்லஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேப்ரியல்லா செல்லஸ் ஒரு இந்திய நடிகை, மாடல், டிக்டோக்கர் மற்றும் ஸ்கிரிப்ட் எழுத்தாளர் ஆவார், அவர் தமிழ் தொடர்களிலும் திரைப்படத் துறையிலும் பணியாற்றி வருகிறார். தற்போது, சன் டிவி சீரியல் 'சுந்தரி' மூலம் சுந்தரியாக பிரபலமடைந்து வரும் இவருக்கு ஒரு ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.40 ஆயிரம் ஆகும்.

இனியா - ஆல்யா மானசா: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இப்போது அவர் இனியா என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில், அதற்காக அவர் பெரும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆல்யா மானசா இனியா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாகப் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசைப்பிரியா விஜயகிருஷ்ணன் - ஸ்ருதி ராஜ்: ஸ்ருதி ராஜ் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பு சில மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது, சன் டிவியில் 'தாலாட்டு' சீரியலில் இசைப்பிரியா விஜயகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அந்த சீரியலில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் ரூ.40 ஆயிரம் ஆகும்.

கயல் - சைத்ரா ரெட்டி: இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பி பார்க்க கூடிய சீரியல்களில் ஒன்றாக உள்ளது கயல். இந்த சீரியல், கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், தற்போது வரை ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கயலாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அதில் சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ 25 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க | சாதி வெறியனாக மாறிய பகத் பாசில்? திணறும் ட்விட்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News