மலையாளத்தில் சன்னிலியோன்; சன்னி ரசிகர்கள் குஷி!

ப்ரியா பிரகாஷ் வாரியரை இயக்கிய இயக்குநரின் அடுத்த ஹீரோயின் சன்னி லியோன்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 03:33 PM IST
மலையாளத்தில் சன்னிலியோன்; சன்னி ரசிகர்கள் குஷி!  title=

ப்ரியா பிரகாஷ் வாரியரை இயக்கிய இயக்குநரின் அடுத்த ஹீரோயின் சன்னி லியோன்!!

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிபரப்பி வருகிறது. 

இவருக்கு ஹிந்தியில் மட்டுமல்ல நாடு முழுததும் ரசிகர்களை பெற்றவர் நடிகை சன்னிலியோன். இந்நிலையில் ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த 'ஒரு அடார் லவ்' படத்தை இயக்கிய இயக்குநர் ஒமர் லுலு இயக்கும் படத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

அவருடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர். படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News