இசைஞானியுடன் ரிகர்சலுக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இசைஞானி இளையராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நீண்ட நேரம் சந்தித்து பேசிக் கொண்டனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 24, 2022, 06:44 PM IST
  • இளையராஜா - ரஜினிகாந்த் சந்திப்பு
  • ஸ்டுடியோவுக்கு சென்ற ரஜினிகாந்த்
  • கோவையில் ஜூன் 2 ஆம் தேதி இசை நிகழ்ச்சி
இசைஞானியுடன் ரிகர்சலுக்கு சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் title=

தமிழ் சினிமாவின் மணி மகுடங்களாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளைய ராஜா ஆகியோர் இன்று சந்தித்துக் கொண்டனர். சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வீட்டிற்கு வந்த இளையராஜா, அவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். இந்த உரையாடலின்போது இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டுள்ளனர். பின்னர் இளையராஜா விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று விசாரிக்க, ‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார். ‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த்.  

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவின் ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள் ஜூன் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 79வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இதனையொட்டி, கோவையில் பிரம்மாண்ட இசைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமாக இருக்கும் பின்னணி பாடகர்கள், இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இசைக்கச்சேரியில் பங்கேற்க உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News