விக்ரம் படத்தை தூக்கி பிடிக்கப்போவதே சூர்யா தான் - கமல்ஹாசன்!

லோகேஷ் குவெண்டின் டரான்டினோ போல படம் எடுக்க முயற்சிக்கிறார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 19, 2022, 06:52 PM IST
  • விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது.
  • சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
  • சூர்யா இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விக்ரம் படத்தை தூக்கி பிடிக்கப்போவதே சூர்யா தான் - கமல்ஹாசன்! title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.  விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கும் போதே இப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது.  மாஸ்டர் படம் வெளிவந்ததில் இருந்து விக்ரம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது.  தனது குருவை வைத்து எப்படிப்பட்ட படத்தை லோகேஷ் தர போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.  தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் விக்ரம் படத்திற்கு வீடியோ கிலிம்ஸ் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  

மேலும் படிக்க | இயக்குனர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! ஹீரோ யார்?

விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் போன்றோர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மேலும் ஆச்சர்யபடுத்தியது.  ட்ரைலரிலும் சூர்யா உள்ளது போல சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது.  மேலும், லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ளார் என்பதை ட்விட்டரில் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்.  விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.  

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன், தமன்னா, ரஞ்சித், மாதவன் போன்றோர் கலந்து கொண்டனர்.  அங்கு ஒரு நேர்காணலில் பேசிய கமல்ஹாசன் லோகேஸ் கனகராஜை புகழ்ந்து பேசியுள்ளார்.  லோகேஷ் குவெண்டின் டரான்டினோ போல படம் எடுக்க முயற்சி செய்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  மேலும், விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அது படத்தின் அடுத்த பாகத்திற்கு தொடக்க புள்ளியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

 

மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News