சூர்யாவின் மிரட்டலான 'கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

Kanguva Movie Glimpse Out Now : நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2023, 06:05 AM IST
  • 'கங்குவா' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.
  • கங்குவா படத்திற்காக இரண்டரை மணி நேரம் மேக்கப் போடும் சூர்யா.
  • சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியான சிறப்பு டீசர்.
சூர்யாவின் மிரட்டலான 'கங்குவா' பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு title=

Kanguva Movie Glimpse Video: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சூரரை போற்று திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம்  'கங்குவா'. இந்தப் படம்  கோலிவுட் திரைப்படங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. 

தற்போது 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2022ல் துவங்கி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றன இந்த மெகா பட்ஜெட் ஃபேண்டஸி ஆக்‌ஷன் திரைப்படத்தில் சூர்யா பல வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்க்காக சூர்யா தனது உடல் அமைப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.   கங்குவா படத்தின் கதை வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் என படக்குழுவின் தரப்பில் இருந்து ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு பல பகுதிகளை முடித்த பிறகு குறிப்பிட்ட பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்கினர்.

மேலும் படிக்க | நோலன் ரசிகர்களால் இந்தியாவிலும் கோடிகளை குவிக்கும் Oppenheimer... முதல் நாள் வசூல் இவ்வளவா?

கங்குவா பட லுக்கில் சூர்யா- லைக்ஸ் அள்ளும் வைரல் ஃபோட்டோ!

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதனிடையே அதிகாலை 12.01 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகும் என்ற அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆர்வத்தை எட்டி உள்ளது.

கங்குவா திரைப்படத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், கே.ஜி.எஃப் அவினாஷ், ரவி ராகவேந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிசாமி மற்றும் எடிட்டராக நிஷாத் யூசுப் ஆகியோர் உள்ளனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தத்திரைப்படத்திற்கு கங்குவா என டைட்டில் வைத்திருப்பதாக படக்குழு கடந்த ஏப்ரல் 16 ஆம் அறிவித்து இருந்தது. இந்தப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் ஷூட்டிங் கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜூ தீவுகள், கேரளா, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடந்தது. இந்நிலையில் கங்குவா 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2டி மற்றும் 3டி வடிவங்களில் திரைக்கு வர உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் இன்னுமும் பல்வேறு முக்கிய அப்டேட்டுகள் தொடர்சியாக தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கங்குவா திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சௌந்தரபாண்டியை அவமானப்படுத்திய ஷண்முகம்.. முத்துப்பாண்டியின் முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News