விஜய் போலவே அரசியலில் ஈடுபாடுள்ள தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வலம் வருவதை தொடர்ந்து, அவரைப்போலவே அரசியல் நாட்டமுள்ள இன்னும் சில நடிகர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.   

Written by - Yuvashree | Last Updated : Jan 29, 2024, 04:26 PM IST
  • விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்
  • இவரைப்போலவே சில நடிகர்களுக்கு அரசியலில் நாட்டம் உள்ளது
  • அவர்கள் யார் யார் தெரியுமா?
விஜய் போலவே அரசியலில் ஈடுபாடுள்ள தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?  title=

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பழம் பெறும் நடிகர்களில் ஆரம்பித்து, தற்போது ட்ரெண்டில் உள்ள நடிகர்கள் வரை யாரையும் அரசியல் மோகம் விட்டு வைக்கவில்லை. பல கோடி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் விஜய், அடுத்து அரசியலில் களமிறங்க உள்ள தகவல், கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அவரை போலவே, இன்னும் சில நடிகர்களுக்கும் அந்த அரசயில் ஆசை உள்ளது. அவர்கள் யார் தெரியுமா? 

விஷால்:

தமிழ் திரையுலகில், ஆக்ஷன் பட ஹீரோவாக வலம் வருபவர் விஷால். தன் படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசுவது, எதிரிகளை எகிறி எகிறி அடிப்பது என பல காட்சிகளில் நடித்திருப்பார் இவர். இவர், இயல்பு வாழ்க்கையிலும் அரசியல் கருத்துகளை கூறுவதற்கு தவறுவதில்லை. சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது, தன் வீட்டில் வெள்ளம் வந்து விட்டதாகவும் தனது ஏரியாவை அரசாங்கத்தினர் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறி வீடியோவை வெளியிட்டார். 

விவசாயிகள், நலிந்தவர்களை அழைத்து அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு சாப்பாடு போடுவது என சில செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்பாேதெல்லாம், பொதுவெளியில் சாப்பிடுவதற்கு முன்னர் மூன்று மதங்களை சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் அந்த தெய்வங்களை கும்பிடுகிறார். இதனால் இவருக்கு அரசியல் நாட்டம்  இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இதை சில ஆண்டுகளுக்கு முன்பு மறுத்திருந்தார். ஆனால், ரசிகர்கள் அதை நம்புவதாக இல்லை. 

சூர்யா:

சமூக நலனின் அக்கறை கொண்ட, அதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் பிரபலங்களுள் ஒருவர், சூர்யா. இவர், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ‘அகரம்’ எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தனது படங்களின் மூலம் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார். அவை, வெளியில் பெரிய பிரச்சனையாகவும் வெடித்திருக்கின்றன. இதனால், சூர்யாவிற்கும் அரசியில் நாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அவர் எங்கும் எதையும் பேசியதில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சந்தானம் நடிக்கும் அடுத்த படம்! இதுவும் பேய் கதைதான்..

அஜித்குமார்:

நடிகர் அஜித்குமார், கடந்த 11 ஆண்டுகளாக தனது பட விழாக்களில் கலந்து கொள்வதையோ, எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுப்பதையோ தவிர்த்து வருகிறார். காரணம், இவர் ஒரு அரசியல் விழாவில் மேடையேறி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதிலிருந்து அது போன்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர், அஜித் அதிமுக கட்சியில் இணைய உள்ளதாக கூறினார். ஆனால் இவை அனைத்தும் வதந்தி என்றும் அஜித்திற்கு அரசியலில் வருவது குறித்து எந்த யோசனையும் இல்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார். 

Vijay

அரசியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய்..

நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் வருவதற்கான ப்ளானில் இறங்கினார். தனது படங்களில் அரசாங்கத்தை தாக்கும் வகையில் வசனங்களை வைப்பது, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் கடந்த தேர்தலில் தனிச்சையாக நின்று அவர்களின் வார்டுகளில் வெற்றியும் பெற்றனர். சில நாட்களுக்கு முன்பு, தனது இயக்க நிர்வாகிகளை சந்தித்த இவர், அரசியலுக்கு வர உள்ள செய்தியை தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த அரசியல் கட்சிக்கான பெயரும் ரெடியாகிவிட்டதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் விஜய் இது குறித்து பேசுவது மட்டும்தான் பாக்கி. 

மேலும் படிக்க | ‘கங்குவா’ பட நடிகருக்கு கிஸ் கொடுத்த ரசிகை..வைரலாகும் வீடியோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News