தமிழ் சின்னத்திரை உலகில் ஜொலிக்கும் தெலுங்கு நட்சத்திரங்கள்..! இவ்ளோ பெரிய லிஸ்டா..!

தமிழ் சின்னத்திரை உலகில் இருக்கும் பலர், தெலுங்கு சினிமாவில் இருந்து வந்தவர்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா..?   

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2023, 12:45 PM IST
  • தமிழ் சின்னத்திரை உலகில் பல தெலுங்கு நடிகர்கள் உள்ளனர்.
  • பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே போன்ற தொடர்களில் இவர்கள் நடித்து வருகின்றனர்.
  • லிஸ்டில் இன்னும் யார் யார் இருக்கிறார்கள் தெரியுமா..?
தமிழ் சின்னத்திரை உலகில் ஜொலிக்கும் தெலுங்கு நட்சத்திரங்கள்..! இவ்ளோ பெரிய லிஸ்டா..! title=

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் அவரவர் மொழி படங்களை தாண்டி கலவை மொழி படங்களிலும் நடித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா, வைபவ், விஷால், ஆதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த தற்போது ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை போல பல சின்னத்திரை நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா..? 

1.சுவாதி கொண்டே:

தமிழ் ரசிகர்களுக்கு இவரை பிரியா என்று குறிப்பிட்டால்தான் தெரியும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே 2’ தொடரில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்து வருகிறார். இவர், தெலுங்கில் வெளியான யாவரில்லூ என்ற தொடரில் நடித்திருந்தார். இவரை தமிழ் ரசிகர்கள் ஈரமான ரோஜாவே 2 தொடர் மூலம் ரசித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | “ரஜினிக்கே 6 படங்கள் தோல்விதான்..” சர்ச்சையில் மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா..!

2.ரக்‌ஷிதா மஹாலக்‌ஷ்மி:

கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முக்கிய பங்கேற்பாளராக இருந்தவர், ரக்‌ஷிதா மகாலக்‌ஷ்மி. இவர், இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்தார். ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற ‘சரவணன் மீனாட்சி 2’ தொடரின் நாயகி இவர். இவர், சித்தி தாலி என்ற தெலுங்கு தொடரில் நடித்து அங்கும் பிரபலமானார். இந்த தொடர் மட்டுமன்ரி நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள்  மற்றும் சத்யா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். 

3.சமீரா ஷெரிஃப்:

தெலுங்கு சின்னத்திரையில் வெளியான‘ஆடபில்லா’எனும் தொடர் மூலம் அறிமுகமானவர் சமீரா ஷெரிஃப்.  இவர், தமிழில் ‘பகல் நிலவு’ எனும் தொடரில் நடித்து பிரபலமானார். இதையடுத்து இவர்,‘ரெக்க கட்டி பறக்குது மனசு’ தொடரில் நாயகியாக நடித்தார். இவருக்கு மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சி இவருக்கு மேலும் புகழ் பெற்று தந்தது. இவர், தன்னுடன் இணைந்து நடித்த சையத் அன்வர் அஹமத்தை காதல் திருமணம் செய்து கொண்டார். 

4.சுஜாதா தனுஷ்:

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’தொடரில் பெரிய அன்ணனின் மனைவியாகவும் அவரது தம்பிகளுக்கு மனைவியாகவும் நடித்து கொண்டிருப்பவர், சுஜாதா தனுஷ். இவருக்கு இந்த தொடரில் பெயர், தனம். தெலுங்கு சின்னத்திரையில் வெளியான ‘சௌந்தர்யா’எனும் தொடரில் நடித்து பிரபலமானவர் இவர். 

5.திரவியம் ராஜகுமாரன்:

ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து இளம் பெண்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வருபவர், திரவியம் ராஜகுமாரன்.  இவர், இந்த தொடரின் முந்தைய சீசனிலும் நடித்திருந்தார். வண்டாலக்கா எனும் தெலுங்கு தொடர் மூலமாகத்தான் இவர் சின்னத்திரை உலகிற்கு அறிமுகமானார். இளைஞிகளின் கரண்ட் க்ரஷ் லிஸ்டில் இருக்கும் சின்னத்திரை நடிகர்களுள் இவரும் ஒருவர். 

6.பிரீத்தி அஸ்ரானி:

2012ஆம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் இருப்பவர், பிரீத்தி அஸ்ரானி. சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பினை பெற்ற அயோத்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இவர், தமிழ் சின்னத்திரையில் கால்பதிக்க உள்ளார். ‘மின்னலே’ எனும் புதிய தொடரில் இவர் ஷாலினி ராஜேஷ் எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும் படிக்க | விண்வெளி அறிவியல் குறித்து வெளியான இந்திய படங்கள்: டாப் லிஸ்டில் தமிழ் படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News