லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்

Leo Movie Update: லியோ படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்காமல் படத்தை லண்டனில் வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 13, 2023, 03:05 PM IST
  • 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’.
  • லியோ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள் title=

லியோ படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்காமல் படத்தை லண்டனில் வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது பலருக்கும் ஆச்சர்யமாக உள்ளது.

லியோ திரைப்படம்:
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்தரங்களில் ஒருவரான விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகை த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். 

அதேபோல் இந்த திரைப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் படிக்க | ஆபரேசன் தியேட்டரில் மாரி! பரிகார பூஜையில் சூர்யாவுக்கு வரும் தடைகள்! மாரி சீரியல்

லியோ ரிலீஸ்:
இதனிடையே இந்த திரைப்படமானது அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ திரைப்படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1100 திரையரங்குகளில் வெளியாகும் லியோ:
லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக மிகப்பெரிய அளவில் தற்போதே டோக்கனை போட்டுள்ளதால் திரையரங்க உரியமையாளர்கள் தற்போது படத்திற்கான காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் லியோ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆடியோ ரிலீஸ் எப்போது? எங்கு? நடத்தப்பபடும்:
இந்த திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நடத்தலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

செகண்ட் சிங்கிள் எப்போது?
அதேபோல் லியோ திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அந்தப் பாடல் வெளியாகலாம் என கருதப்படுகிறது. இந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்றும்; இந்த திரைப்படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தான் என்றும் கூறப்படுகிறது. 

லண்டனில் லியோ:
இந்நிலையில் தற்போது வெளியான ஒரு தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி விஜய்யின் லியோ திரைப்படத்தின் லண்டன் உரிமையை வாங்கியுள்ள அஹிம்சா என்ற நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் லியோ படத்தில் இருந்து ஒரு காட்சியை கூட நீக்காமல் திரைப்படத்தை லண்டனில் வெளியிட இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 

அஹிம்சா வெளியிட்ட ட்வீட்:

 

,மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: நட்சத்திராவின் பிளானுக்கு பெரிய செக் வைத்த கார்த்திகை.. அபிராமி எடுக்கும் முடிவு என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News