ஆபரேசன் தியேட்டரில் மாரி! பரிகார பூஜையில் சூர்யாவுக்கு வரும் தடைகள்! மாரி சீரியல்

Maari Zee Tamil mega serial update: பரிகார பூஜையில் சூர்யாவுக்கு வரும் தடைகள்.. மாரி உயிர் காப்பாற்றப்படுமா? - மாரி இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2023, 02:19 PM IST
ஆபரேசன் தியேட்டரில் மாரி! பரிகார பூஜையில் சூர்யாவுக்கு வரும் தடைகள்! மாரி சீரியல் title=

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. பலராலும் விரும்பி பார்க்கப்படும் மாரி சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குடும்பங்களாக அமர்ந்து இந்த சீரியலை பார்க்குமளவுக்கு மாரி மெகாத் தொடர் பிரபலமாகிவிட்டது.

மாரி சீரியல் நேற்றைய எபிசோட்

நேற்றைய எபிசோடில் சூர்யா மாரியின் உயிரை காப்பாற்ற காட்டு அம்மனுக்கு பரிகாரம் செய்ய கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

மாரி சீரியல் இன்றைய எபிசோட்

சூர்யா, சுஜாதா, ஹாசினி ஆகியோர் கோவிலுக்கு வர சூர்யா காவி உடைக்கு மாரி தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு பூஜைக்கு தயாராகிறார். கோவிலில் பூஜை நடந்து ஒரு பெரிய மண் பாத்திரத்தில் மாவிளக்கு தயார் செய்கிறாள்.

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் ‘இந்த’ நடிகை இடம்பெற இருந்தாரா..?

மாவிளக்கில் தீபத்தை ஏற்றி அணையாமல் காட்டு அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று அங்குள்ள விளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்கின்றனர். 

காட்டு அம்மன் கோவிலில் சூர்யா

சூர்யா இங்கே கிளம்பி செல்ல மற்றவர்கள் கோவிலில் பூஜை செய்ய ஹாஸ்பிடலில் மாரிக்கு ஆப்ரேஷன் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. கரடுமுரடாக கல், மண்ணாக இருக்கும் பாதையில் சூர்யா கஷ்டப்பட்டு நடந்து செல்கிறான்.

சூர்யாவின் கஷ்டத்தைப் பார்த்து தேவி வருத்தப்படுகிறாள். மறுபுறம், மாரி அருகே தோன்றி சூர்யா உனக்காக பரிகாரம் செய்கிறான், கண்டிப்பா நீ பிழைப்பா உனக்கு குழந்தையா நான் பிறப்பேன் என்று தேவி சொல்கிறாள். 

மாரியை ஆப்ரேஷன் தியேட்டர் கொண்டு செல்ல தயார் செய்யும் காட்சி வருகிறது. தாராவும் ஜாஸ்மினும், மாரி பிழைக்கமாட்டாள் பிணமா தான் வருவாள் என்று சந்தோசப்படுகின்றனர்.

கோவிலை நோக்கி நடந்து சென்ற சூரியா, நடுவில்  பெரிய ஆறு இருக்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான். இப்படிப்பட்ட கட்டத்தில் சூர்யாவுக்கு யார் வழிகாட்டுவார்கள் என்று கலக்கம் ஏற்படுகிறது.

மாரி சீரியலில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். Zee5 தொலைகாட்சியிலும் பிரபலமான மாரி சீரியல் ஒளிபரப்பாகிறது.

மேலும் படிக்க | மார்க் ஆண்டனி படம் செப்.15ம் தேதி வெளியாகுமா? நீதிமன்றம் சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News