விக்ரம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!- மலைக்க வைக்கும் பட்டியல்!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படம் உலகம் முழுக்க எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 30, 2022, 01:17 PM IST
  • கமல் நடித்துள்ள விக்ரம் ஜூன் 3 ரிலீஸ்
  • தியேட்டர்களின் எண்ணிக்கை விபரம் கசிந்தது
  • விக்ரம் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது
விக்ரம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!- மலைக்க வைக்கும் பட்டியல்! title=

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் வருகிற 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. கமலின் ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் தயாரித்து நடித்துள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பல திரை நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமுடன் புக்கிங் செய்துவருகின்றனர். ரஜினி-விஜய் சேதுபதி, விஜய்- விஜய் சேதுபதி காம்போவைக் கண்டுகளித்துவிட்ட ரசிகர்கள், கமல்- விஜய் சேதுபதி காம்போ எப்படி இருக்கும் எனக் காண ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் உலகம் முழுக்க மொத்தமாக எத்தனை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது எனும் விபரம் தற்போது கசிந்துள்ளது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக சுமார் 5000 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களில் இதை வெளியிடவுள்ளார்களாம்.

மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!

பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ளதால் மற்ற பகுதிகளிலும் கணிசமான அளவுக்கு இப்படம் வெளியாகவுள்ளது. அதன்படி இந்தியில் 1500க்கும் அதிகமான திரையரங்குகளில் இது வெளியாகவுள்ளதாம். அதேபோல மலையாளத்தில் 400 திரையரங்கள் என ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.

மேலும் படிக்க | விக்ரம்: சென்சார்ல கட் ஆன சீன்ஸ் என்னென்ன தெரியுமா?! - இதோ பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News