தானா சேர்ந்த கூட்டம்: தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாருக்கு?

சூர்யா, கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘நானும் ரவுடிதான் பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

Last Updated : Dec 18, 2017, 09:07 AM IST
தானா சேர்ந்த கூட்டம்: தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாருக்கு? title=

சூர்யா, கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘நானும் ரவுடிதான் பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 

இசையமைப்பாளரான அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் வெளியிடப்பட்டது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.

அதேபோல  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டீஸர் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளிவருகிறது.

இந்நிலையில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை தற்போது பரதன் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியுள்ளது. இதை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

 

 

Trending News