Actor Vadivelu: இன்று புதிதாய் பிறந்தேன் பிறந்தநாளில் நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி

நேற்று தன்னுடைய பிறந்தநாளை நாய் சேகர் படக்குழுவினருடன் கொண்டாடிய வடிவேலு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த பிறந்தநாள் அன்று புதிதாக பிறந்தது போல் உள்ளதாக தெரிவித்தார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 13, 2021, 06:32 AM IST
  • இன்று புதிதாய் பிறந்தேன்!
  • பிறந்தநாளில் நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி
  • நேற்று நாய் சேகர் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடினார் வைகைப்புயல்
Actor Vadivelu: இன்று புதிதாய் பிறந்தேன் பிறந்தநாளில் நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி title=

சென்னை: இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாள் மிகவும் சிறப்பானது என்று கூறிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, இந்த பிறந்தநாளில் புதிதாக பிறந்தது போல் உள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய பிறந்தநாளை நாய் சேகர் படக்குழுவினருடன் நேற்று கொண்டாடினார்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ள வைகைப்புயல் வடிவேலு, நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் தனது அடுத்த இன்னிங்சை தொடங்குகிறார்.  

நேற்று தன்னுடைய பிறந்தநாளை நாய் சேகர் படக்குழுவினருடன் கொண்டாடிய வடிவேலு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இந்த பிறந்தநாள் அன்று புதிதாக பிறந்தது போல் உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து தற்போது நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சி என்றும் வடிவேலு கூறினார்.  திரையுலகில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. சாதித்து விட்டதாக நான் நினைக்கவில்லை.  இன்னும் பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தார்.  

காட்டாற்று வெள்ளத்தில் போய்க்கொண்டு இருந்த தன்னை கலைத்தாய் அள்ளி எடுத்துக் கொண்டால் இன்னும் பெருமிதத்தோடு கூறினார். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை. மற்றவர்களை சிரிக்க வைக்கும் இந்த வேலை எனக்கு பிடித்திருக்கிறது.  குழந்தைகள் வரை என்னை தெரிந்து வைத்து, என்னை போன்றே பாவனைகள் செய்வது கடவுள் கொடுத்த வரம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Also Read | மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு தான் இந்த உசுரு போகும்: வடிவேலு பளிச்

திரைத்துறையில் எனக்கு போட்டி நான் தான். ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் முந்தைய கதாபாத்திரத்தை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைப்பேன் என்றும் வடிவேலு கூறினார்.  அதேபோல் எந்த சமூக வலைதளத்திலும் நான் இல்லை என் பெயரில் வெளியாகும் அனைத்து சமூக வலைதள பகுதிகளும் போலியானவை என்றும் வடிவேலு கூறினார். 

அதேபோல் சுராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அவரிடம் முதன் முதலில் பேசிய போது என்னுடைய தீவிர ரசிகர் என உற்சாகத்துடன் பேசினார். அவருடன் வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி எனவும் வடிவேலு தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு நான்காண்டு காலமாக நடிக்க முடியாமல் இருந்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது. பின்னர் ஷங்கருடன் சுமூகமாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டதால் மீண்டும் நடிக்கிறார் வடிவேலு.

Also Read | துபாய் காமெடி பாணியில் வடிவேலுக்கு வாழ்த்துக்கள் சொன்ன சேரன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News