வித்யுத் ஜம்வாலின் உள்ளாடை விளம்பரத்திற்கான முதல் ஆடிஷன் வீடியோ வைரல் -Watch

Vidyut Jammwal Video: வித்யுத் ஜம்வாலின் ஒரு உள்ளாடை விளம்பரத்திற்காக முதன்முதலில் ஆடிஷன் செய்த வீடியோ கிளிப்பிங் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Aug 8, 2023, 04:32 PM IST
  • அஜித்குமார் நடித்த பில்லா 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
  • நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தார்.
  • விளம்பரத்திற்காக ஆடிஷன் செய்த வீடியோ கிளிப்பிங் வைரல்.
வித்யுத் ஜம்வாலின் உள்ளாடை விளம்பரத்திற்கான முதல் ஆடிஷன் வீடியோ வைரல் -Watch title=

Cinema News In Tamil: பாலிவுட் சினிமாவின் திறமையான நடிகராக அறியப்படும் வித்யுத் ஜம்வால் குறித்த செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த செய்திக் குறித்து பார்ப்போம். அதற்கு முன்பாக வித்யுத் ஜம்வால் யார்? அவரின் முதல் எது? அவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் என்ன? என்பதையும் அறிந்துக் கொள்ளுவோம். இந்தி, தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் சக்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில், இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம்  ஹீரோவாக நடித்த நிஷிகாந்த் காமத் இயக்கிய தனது முதல் இந்தி திரைப்படமான ஃபோர்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடித்தார். அதேபோல தல என அழைக்கப்பட்டு தற்போது ஏகே என அறியப்படும் நடிகர் அஜித்குமார் நடித்த பில்லா 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வித்யுத் ஜம்வாலுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் அவரின் ஃபிட்னஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் அவரின் உழைப்பு ஆகும். இவர் ஒரு தற்காப்புக் கலைஞரும் ஆவார். கேரளாவில் இருந்து இந்திய தற்காப்புக் கலையான களரிபயட்டில் பயிற்சி பெற்றவர்.

மேலும் படிக்க - ரஜினி, விஜய் இல்லை! 3000 கோடி சொத்து வைத்துள்ள தென்னிந்திய நடிகர் யார் தெரியுமா?

இவர் ஒரு உள்ளாடை விளம்பரத்திற்காக முதன்முதலில் ஆடிஷன் செய்த வீடியோ கிளிப்பிங் ஆன்லைனில் வெளியாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த உள்ளாடை விளம்பரத்திற்காக இவர் மிகவும் பொருத்தமாக இருக்கிறார் மற்றும் அவரின் கட்டுமஸ்தான உடல் உள்ளாடை விளம்பரத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

பல படங்களில் நடித்து இருந்தாலும், ஆனால் இந்தியில் வெளியான கமாண்டோ படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் பெயரையும் புகழையும் பெற்றார். பில்லா 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானா அவர், அஞ்சான், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். பில்லா 2 படத்தில் நடித்து மூலம் அவர் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. அதே ஆண்டில், நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தார். துப்பாக்கி படம் பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்திற்காக வில்லன் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான SIIMA விருதையும் பெற்றார். இவர் பாலிவுட்டில் அறிமுகமானா 2011 ஆம் ஆண்டு வெளியான ஃபோர்ஸ் திரைப்படம் தமிழில் பெறும் வெற்றி பெற்ற காக்கா காக்கா படத்தின் ரீமேக் ஆகும். 

மேலும் படிக்க - புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News