புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!

Pushpa 2 Update: இன்று ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழுவினர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 8, 2023, 11:48 AM IST
  • புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
  • புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
  • தற்போது வரை 40 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்! title=

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் பல்வேறு இடங்களில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது புஷ்பா படம் குறித்து, சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகின்றது. மேலும் தற்போது வரை 40 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

மேலும் படிக்க |  'ஜெயிலர்' எப்படி இருக்கு..? படம் பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்..!

புஷ்பா 2 புதிய போஸ்டர்:
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மற்றும் புஷ்பா படத்தின் வில்லனான ஃபஹத் ஃபாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ரிலீஸ் எப்போது?
புஷ்பா 2 படத்தின் ப்ரமோ வீடியோ ஒன்று சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. "Where is Pushpa?" என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், தாதாவாக உலா வந்த புஷ்பா போலீசாரின் பிடியிலிருந்து தப்பி இறந்து விட்டது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோ வெளியானதிலிருந்து முதல் பாகத்தில் சாதரண ஆளாக இருந்த புஷ்பா, அடுத்த பாகத்தில் இவ்வளவு பெரிய டான் ஆக உயர்ந்தது எப்படி? என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்றது. 

அடுத்த வருடம் ரிலீஸ்?
புஷ்பா 2 திரைப்படம், இந்த வருடமே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, சம்மர் விடுமுறையை ஒட்டி, திரை விருந்தாக இப்படம் ரிலீஸ் ஆகிறது. செம்மரக்கடத்தலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜ் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஃபஹத் ஃபாசில்
பிரபல மலையாள இயக்குனரும் தமிழில் ’காதலுக்கு மரியாதை’ ’வருஷம் 16’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஃபாசில் மகன் தான் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் ஃபஹத் ஃபாசில் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ’வேலைக்காரன்’ விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ மற்றும் உதயநிதி நடித்த ’மாமன்னன்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, கேரள மாநில திரைப்பட விருது, பிலிம்பேர் விருது என மொத்தம் 19 விருதுகளை பெற்றுள்ளார். இவரது தனிச்சிறப்பு வில்லனாக நடித்தாலும் ஹீரோ போல் தான் தெரிகிறார் என்பதுதான். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டையும் தாண்டி... ஜெயிலர் பட ரிலீஸ் அன்று அடுத்தடுத்து லீவ் விடும் நிறுவனங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News