வட மாநிலத்தவர் பிரச்னையில் விஜய் ஆண்டனி ட்வீட்... மக்களின் மனவோட்டம் என்ன?

வட மாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி பதிவிட்ட ட்வீட்டுக்கு, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 13, 2023, 06:33 PM IST
  • விஜய் ஆண்டனியின் ட்வீட் தற்போது பரபரப்பை உண்டாக்கியது.
  • பாராட்டுகளும், விமர்சனங்களும் ஒருங்கே எழுந்துள்ளது.
வட மாநிலத்தவர் பிரச்னையில் விஜய் ஆண்டனி ட்வீட்... மக்களின் மனவோட்டம் என்ன? title=

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. 

சமீபத்தில் மதுரையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில், வட மாநிலத்தவர்களின் வருகையை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்பட்டது. வட மாநிலங்களில் இருந்து சாரசாரையாக மக்கள், ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவதாக வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதை தொடர்ந்தே, பல்வேறு பேச்சுகள் வெளிவரத்தொடங்கின. 

அந்த வகையில், இதுபோன்ற பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, நேற்று ட்வீட் செய்திருந்தார். அதில்,"வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என பதிவிட்டிருந்தார்.

விஜய் ஆண்டனியின் இந்த ட்வீட்டுக்கு பாராட்டும், விமர்சனமும் ஒருங்கே எழுந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் வருகையால், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கூலி தொழில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது மட்டுமின்றி, டிஎன்பிஎஸ்சி, ரயில்வே, வங்கி, கல்லூரி இருக்கைகள் உள்ளிட்ட அரசு பணியிடங்களிலும் தமிழர்களின் வாய்ப்பை பறிவிட்டதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | கர்ப்பமா இல்லையா அதுக்கும் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்! இசையால் மயக்கிய ரிஹானா

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புகளை பயன்படுத்தி அதில் வட மாநிலத்தவர்கள் மட்டுமின்றி வேறு மாநிலத்தவர்கள் தமிழர்களின் உரிமையை பறிப்பது என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், பிரச்னை எப்போதும் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்கள் மீதே ஆதங்கம் கொட்டப்படுவதாக கூறப்பட்டன.

அதில், விஜய் ஆண்டனியின் இந்த கூற்று, அத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவு குரலாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், தமிழர் உரிமைகள் பறிக்கப்படும்போது, பொதுவாக வடமாநிலத்தவர் பிரச்னையை அணுகுவது எந்தவிதத்திலும் ஒரு தீர்வை அளிக்காது எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். 

வட மாநிலத்தவர்களை மிரட்டுவது, அவர்கள் மீதான வெறுப்பை வளர்ப்பது எந்தவிதத்திலும் பயனளிக்காது என்பதால் இருமுனை கத்தியாக இந்த பிரச்னையை தக்க ஆய்வுகள் மேற்கொண்டு சீர்செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. 

மேலும் படிக்க | விஜய்யின் 'லியோ' படத்தில் இணையப்போகும் சூப்பர் ஸ்டார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News