ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி - விஜய் ரசிகர்கள்!

ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்று செங்கல்பட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரலாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 28, 2023, 09:32 AM IST
  • அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ.
  • இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது.
  • படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறது.
ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன? ஆட்சிய புடிச்சுட்டா போச்சி - விஜய் ரசிகர்கள்!  title=

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 5வது படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.  இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில் லியோ ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ரஜினிக்கு முன்பு ஜெய்லர் படத்தில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?

leo

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. "ஆடியோ லாஞ்ச் இல்லைனா...  என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி  என்ன நண்பா?". இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது. அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என இரண்டு போஸ்டர்கள் செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், போஸ்டர் மூலம் தொண்டர்கள் அறைகூவல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லியோ ஆடியோ லான்ச்க்கு திமுக அரசு அனுமதி தர வில்லை என்றும், லியோ சென்னை பகுதியின் விநியோக உரிமைத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுத்தால் மட்டுமே ஆடியோ லான்ச்சிற்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக சவுக்கு சங்கர் X தளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இது சர்ச்சையான நிலையில், படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.  ஆனால், தற்போது ஆடியோ லான்ச் நடைபெறாமல் போனது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.  எவ்வாறாயினும், ஆடியோ லான்ச் நடைபெறாது என்ற செய்தியே தற்போது லியோ படத்திற்கு கூடுதல் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.

தற்போது லியோ படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை வழங்கி வருகிறது.  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ படத்தின் 2வது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.  ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இனி தினமும் அப்டேட்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், ஆடியோ லான்ச் நடைபெறாததால் விஜய் தரப்பில் இருந்து ஏதேனும் வகையில் புரமோஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த முறை பீஸ்ட் ஆடியோ லான்ச் நடைபெறாத நிலையில், விஜய்யின் நேர்காணல் வெளியானது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” ஓடிடி ரிலீஸ் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News