துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” ஓடிடி ரிலீஸ் எப்போது?

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கிங் ஆஃப் கொத்தா” படம் செப்டம்பர் 29 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Sep 27, 2023, 01:28 PM IST
  • ஓடிடியில் வெளியாகும் கிங் ஆஃப் கொத்தா.
  • செப்டம்பர் 29 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
  • துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” ஓடிடி ரிலீஸ் எப்போது? title=

"கிங் ஆஃப் கொத்தா” படம் செப்டம்பர் 29, 2023 முதல்,  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது, மலையாளத்தில் வெளியான ஒருசில கேங்ஸ்டர் படங்களில் இதுவும் ஒன்று. இந்த பரபரப்பான க்ரைம் டிராமா படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார் மற்றும் அபிலாஷ் N சந்திரன் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரசன்னா, ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், நைலா உஷா, அனிகா சுரேந்திரன், ஷம்மி திலகன், சுதி கொப்பா, செம்பன் வினோத் ஜோஸ், ரித்திகா சிங் மற்றும் சௌபின் ஷாகிர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

“கிங் ஆஃப் கொத்தா” உலகில் அடியெடுத்து வைக்கும் ராஜு என்ற இளைஞனின் பயணமும், கேங்ஸ்டர் உலகில் அவன் ஏற்படுத்தும் மாற்றமும் தான் இந்தப்படத்தின் கதை. ராஜுவின் பயணத்தில் அவன் வெகு சாதாரண மனிதனாக இருந்து அடிதடியில் அடியெடுத்து வைத்து, கேங்ஸ்டர் உலக தாதாவாக மாறும் அவனின் பரிணாம வளர்ச்சி தான் இப்படம். கோதா நகரில் அவன் அதிகாரத்தின் உச்சத்தை அடைய, தியாகங்களைச் செய்கிறான். இந்தத் திரைப்படம் நிலையான ஒரு கேங்க்ஸ்டர் கதையாக இல்லாமல், அதிவேகமான சினிமா அனுபவத்தைத் தரும், பரபரப்பான திரைக்கதையுடன் காதலின் பக்கத்தையும் கூறுகிறது.

மேலும் படிக்க | படப்பிடிப்பில் துன்புறுத்திய தமிழ் நடிகர்: நித்யா மேனன் ஓபன் டாக்

Wayfarer Films மற்றும் Zee Studios தயாரிப்பில் உருவாகியுள்ள “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படம்,  நட்சத்திர நடிகர்கள், வித்தியாசமான களம், பரபரப்பான திரைக்கதை, கணிக்க முடியாத திருப்பங்கள் என ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை தருவதுடன், மறக்க முடியாத சினிமா பயணமாக இருக்கும். 
"கிங் ஆஃப் கோத்தா" மூலம் தனது பாக்ஸ் ஆபிஸ் வசூலை மீண்டும் நிரூபித்துள்ளார் துல்கர். இந்த படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. உலகளவில் ₹38.30 கோடி வசூலித்துள்ளது. ஆதாரங்களின்படி, கேரளாவில் ₹15.35 கோடிகளை குவித்துள்ளது. மற்ற இந்திய மாநிலங்கில், அதன் ₹7.05 கோடி வசூலித்துள்ளது. மலையாளத் திரைப்படங்கள் தற்போது வெளிநாடுகளிலும் பிரபலமடைந்து வரும் நிலையில், இந்த படம் ₹15.90 கோடிகளை வசூலித்துள்ளது.

கிங் ஆஃப் கோத்தா மொத்த வசூல்

கேரளா - 15.35 சிஆர்
மற்ற மாநிலங்கள் - 7.05 CR
வெளிநாடு - 15.90 CR
மொத்த உலகளாவிய வசூல் - 38.30 கோடி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

YT link: https://www.youtube.com/watch?v=YpD3MtwgQ38

மேலும் படிக்க | விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்குகிறது.. வெளியானது ருசிகர தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News