சரித்திரத்தில் இடம் பிடித்த தளபதி..அமெரிக்காவின் பிரபல கட்டத்தில் விஜய்யின் வீடியோ ஒளிபரப்பு..!

Actor Vijay Birthay: நடிகர் விஜய் நாளை பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, அவர் குறித்த வீடியோ ஒன்று அமெரிக்காவில் உள்ள பிரபல கட்டடம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 21, 2023, 07:26 PM IST
  • விஜய் நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
  • டைம்ஸ் ஸ்குவையர் கட்டத்தில் அவரது வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சரித்திரத்தில் இடம் பிடித்த தளபதி..அமெரிக்காவின் பிரபல கட்டத்தில் விஜய்யின் வீடியோ ஒளிபரப்பு..! title=

தமிழ் ரசிகர்களால் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் விஜய்க்கு நாளை பிறந்தநாள். எல்லா வருடங்களை போலவும் இந்த வருடமும் விஜய்யின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். 

தளபதியின் பிறந்தநாள்: 

ஆண்டுகள் ஆக ஆக, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பட்டாளமும் பெருகிக்கொண்டே போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை கண்டுள்ளார் விஜய். நாளை இவரது 49ஆவது பிறந்தநாள் ஆகும். இதற்காக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே இவரது ரசிகர்கள், #Thalapathybirthdaymonth எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். வாரா வாரம் எங்காவது அன்னதானம் கொடுப்பது, முடியாதோருக்கு உதவி செய்வது போன்ற செயல்களில் விஜய் மக்கள் நீதிமன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த விஜய்யின் பிறந்தநாள் ஒருவழியாக நாளை கொண்டாடப்பட இருக்கிறது. 

மேலும் படிக்க | மீண்டும் பாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுக்கும் தனுஷ்..அதுவும் இந்த இயக்குநரின் படத்திலா?

பட அப்டேட்:

விஜய், தனது பிறந்தநாளுக்கு முன்பாகவே ஏதாவது ஒரு படத்தில் கமிட் ஆகி விடுவார். விஜய்யின் பிறந்தநாளுக்கு அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் அப்டேட்டும் வெளியாகும். அதுபோலத்தான், தற்போதும் அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து ரசிகர்களுக்காக ஏதோ சர்ப்ரைஸ் ப்ளான் செய்து வைத்திருக்கிறாராம் லோகேஷ். இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

நியூயார்க் கட்டடத்தில் விஜய்யின் வீடியோ:

விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஒன்றாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஒரு செயலை செய்துள்ளனர். உலகின் பிரபலமான நியூ யார்க் டைம்ஸ் ஸ்கொயர் கட்டடத்தில் விஜய் இதுவரை நடித்துள்ள படங்களை வைத்து அதை எடிட் செய்து ஒளிபரப்பு செய்துள்ளனர். விஜய்யை உலக நாடுகள் அறியும் வகையில் அவர்கள் செய்துள்ள இச்செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவரை எந்த தமிழ் நடிகர்களும் இந்த கட்டடத்தில் ஃபீச்சர் செய்யப்பட்டதில்லை என்பதுதான். இதனால், விஜய் ரசிகர்கள் பெருமையாக உணருவதாக கூறிவருகின்றனர். 

அரசியல் பேசும் தளபதி…

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே தனக்குள் இருக்கும் அரசியல் ஆர்வத்தை ஜாடை மாடையாக பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். தான் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள், பட வசனங்கள் மூலமாக அவர் அரசியல் கலந்து கருத்துகளை மக்களிடம் கூறிவருகிறார். இதை வைத்து ஆரம்பத்தில் “விஜய் அரசியலுக்கு வருவாரோ..” என சந்தேகித்த மக்கள் இப்போது அதை கனஃபார்மே செய்து விட்டனர். சமீபத்தில் 10,12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளை அழைத்து விஜய் சான்றிதழ்கள் மற்றும் நன்கொடைகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியிலும் அரசியல் பேசும் நிகழ்வுதான் நடந்தது. இதை வைத்து தற்போது பல அரசியல் கட்சியினர் தங்களது பேட்டிகளில் குறிப்பிட்டு வருகின்றனர். 

சினிமாவை விட்டு விலகும் விஜய்? 

அரசியலில் அதீத ஈடுபாடு காட்டும் விஜய், தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர், தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து, அவர் சினிமாவை விட்டு விலக வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாேட்டியிட விஜய் முடிவு செய்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதவும் இன்னும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | பலரை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டெடுத்த மோட்டிவேஷனல் தமிழ் பாடல்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News