ரஜினி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி!

ராஜு முருகன் கார்த்தியை வைத்து இயக்கப்போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2022, 08:16 PM IST
  • இவரது இயல்பான நடிப்பும் தோற்றமும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
  • கதாநாயகனாக மட்டுமல்லாது படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
ரஜினி, விஜய், கமல் படங்களை தொடர்ந்து மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி! title=

தமிழ் திரையுலகில் குறைந்த காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.  இவரின் திறமையால் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார், இவரது இயல்பான நடிப்பும் தோற்றமும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.  இவர் மற்ற ஹீரோக்களை போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரைத்துறையில் கலக்கி வருகிறார்.  கதாநாயகனாக மட்டுமல்லாது தற்போது தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் சில ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

மேலும் படிக்க | ரஜினி-விஜய்-எஸ்கே-வை ஒரே மேடையில் ஏற்றிய நெல்சன்..!

இவர் பிரபல நடிகரான பின்பு முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்தின் படத்தில் தான் வில்லனாக நடித்தார்.  கடந்த 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'பேட்ட'.  சன் பிக்ச்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிக்குமார், நவாசுதீன் சித்திக் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் திரையில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் 'மாஸ்டர்'.  இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோஹனன், சாந்தனு, சஞ்சீவ் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.  இந்த இரண்டு படங்களில் இவரது வில்லன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

Vijaysethupathi

தற்போது விஜய் சேதுபதி குறித்து வந்திருக்கும் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன், நடிகர் கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.  இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே விஜய் சேதுபதி, சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் கார்த்தியின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக, அதுவும் அவருக்கு ஈடாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்.

மேலும் படிக்க | இந்த வாரம் ரிலீஸாகும் விக்ரம், விஜய் சேதுபதி திரைப்படங்கள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News