அவமானப்படுத்திய மகாலட்சுமி.. சரியான பதிலடி கொடுத்த சீதா.. சீதாராமன்-ஐ காணத்தவறாதீர்கள்

Seetha Raman Today Episode: “கேட்கல சத்தமாக சொல்” என விஜய் பட ஸ்டைலில் மேலும் மேலும் அவமானம் படுத்தும் மகாலட்சுமி. சீதாவுக்காக மன்னிப்பு கேட்ட சத்தியன். விறுவிறுப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய சீதாராமன் சீரியலை தவறவிடாதீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 2, 2023, 01:52 PM IST
  • மன்னிப்பு தானே கேட்க வந்தான் மன்னிப்பு கேட்க சொல்லுங்க
  • கேட்கல சத்தமா என சொல்லி அவனை அவமானப்படுத்தும் மகாலட்சுமி.
  • இப்ப காத்து உங்க பக்கம் வீசலாம். கண்டிப்பா நான் திருப்பி அடிப்பேன்
அவமானப்படுத்திய மகாலட்சுமி.. சரியான பதிலடி கொடுத்த சீதா.. சீதாராமன்-ஐ காணத்தவறாதீர்கள் title=

Seetha Raman In Zee Tamil: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன சம்பவங்கள் நடக்கும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது:
இன்று சீதாராமன் சீரியலில் சீதா சத்யனிடம் கெஞ்ச அவன் இப்பவும் நான் மன்னிப்பு கேட்க வரலனா எனக்கும் மகாலட்சுமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என சொல்லி மன்னிப்பு கேட்க ஒத்துக் கொள்கிறான். பிறகு சீதா மற்றும் சத்தியன் இருவரும் மகாலட்சுமி வீட்டுக்கு வர சீதா ராமிடம் இங்க பாருங்க அவரை கூட்டிட்டு வந்துட்டேன் கீழே இறங்கி வாங்க பாஸ் என சொல்ல ராம் நீங்க மன்னிப்பு கேட்டால் தான் கீழே வருவேன் என சொல்கிறான். 

அடுத்ததாக சத்தியன் உள்ளே வந்ததும் மகாலட்சுமி அவனை அசிங்கப்படுத்துவது போல் பேச அவன் சேதுபதியை பார்த்து ராம் உங்க ரத்தம் தானே அவன் கீழே குதிச்சு அவனுக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா என கேட்கிறான். மகாலட்சுமி தேவையில்லாத பேச்சு எதற்கு? மன்னிப்பு தானே கேட்க வந்தான் மன்னிப்பு கேட்க சொல்லுங்க என சொல்ல அவன் மன்னிப்பு கேட்கிறான். 

மேலும் படிக்க: காணாமல் போன சரண்யா..பதறும் சக்தி..மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் செம ட்விஸ்ட்

ஆனாலும் மகாலட்சுமி கேட்கல சத்தமா என சொல்லி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். இருந்தாலும் சீதாவுக்காக சத்தியன் மன்னிப்பு கேட்கிறான். பிறகு சீதா ராமை கூட்டி வர மேலே செல்ல அவளை அதட்டி கூப்பிடும் மகாலட்சுமி நீயும் மன்னிப்பு கேட்கணும் மறந்துட்டியா என சொல்ல சீதா மன்னிப்பு கேட்கிறாள். 

பிறகு மேலே சென்று மன்னிப்பு கேட்டு விட்டோம் என ராமை கீழே கூப்பிட அவன் சித்தி சொல்லாமல் நான் கீழே வரமாட்டேன் என சொல்கிறான். பிறகு மகா அவனை கீழே கூட்டிச் சென்று நீ ஜெயிச்சிட்ட ராம், உன் சித்தியோட மரியாதையை காப்பாத்திட்ட என சொல்லி உள்ளே அனுப்பி வைக்கிறாள். 

ராம் உள்ளே போனதும் மகாலட்சுமி சீதாவிடம் பார்த்தல்ல என்ன உன்னால ஒன்னும் செய்ய முடியாது என சொல்ல இந்த முறை வேண்டுமானால் காத்து உங்க பக்கம் வீசலாம் ஆனா நான் கண்டிப்பா திருப்பி அடிப்பேன் இதுக்கெல்லாம் பதில் கொடுப்பேன் என சீதா சவால் விடுகிறாள்.

மேலும் படிக்க: மாரி அப்டேட்: சூர்யாவை வசியம் செய்த ஜாஸ்மின்.. மாரிக்கு செக்? இன்று நடக்கப்போவது என்ன?

அடுத்து ரூமுக்கு வந்த சீதா மன்னிப்பு கேட்டால் எனக்காக என்ன வேணாலும் செய்றேன்னு சொன்னீங்க ல வாங்க மகாபலிபுரம் போகலாம் என சொல்லி கூப்பிட முதலில் மறுக்கும் ராம் பிறகு அவளுடன் வெளியே செல்ல சம்மதிக்கிறான்.

இதை சீதா சத்தமாக சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் அர்ச்சனா மகாலட்சுமியிடம் இந்த விஷயத்தை சொல்ல ஓடுகிறாள். அதற்குள் சீதா ராமை அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் கிளம்பி விடுகிறாள். வெளியே வந்த சீதா மகாலட்சுமிக்கு போன் செய்து இந்த முறையும் நான் தான் ஜெயித்தேன். அவரோட வெளியே போக ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி என்று பேசி வெறுப்பேற்றுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

முந்தைய எபிசோடுகளில் நடந்தது:
சீதா ராமன் தொடரில் இன்றைய எபிசோடில் ராம் சித்தியிடம் சீதாவும் சத்யனும் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் கீழே குதித்து விடுவேன் என மொட்டை மாடியில் இருந்து மிரட்ட சீதா சத்யனுக்கு போன் செய்து மகாலட்சுமியிடம் வந்து மன்னிப்பு கேட்குமாறு கேட்க சத்யா மறுப்பு தெரிவிக்கிறான். 

மேலும் படிக்க: கார்த்திகை தீபம் அப்டேட்: கதிரை தேடி அலையும் கார்த்தி, தீபாவுக்கு செக் வைத்த ஐஸ்வர்யா

கீழே குதித்து விடுவேன் என பயமுறுத்தும் ராமிடம் கதையின் நாயகி சீதா “சத்யன் வர மாட்டேன்னு சொல்றாரு” என கூறுகிறார். ராம், “சத்யன் வந்து மன்னிப்பு கேட்கணும் இல்லனா நான் கீழே இறங்க மாட்டேன்” என உறுதியாக சொல்லிவிடுகிறான். இதனால்,  சீதா நேரடியாக சத்யன் வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கிறாள். அதன் பிறகு சீதா மற்றும் மீரா இருவரும் சத்யன் வீட்டுக்கு கிளம்ப, ராமிடம் “நாங்க சத்தியனை பார்க்க போயிட்டு வரோம் நீங்க அதுவரைக்கும் எந்தவித தப்பான முடிவையும் எடுத்து விடாதீங்க” என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். 

மறுபக்கம் மகாலட்சுமி நம் திட்டம் பலித்துவிட்டது என சந்தோஷமாக உட்கார்ந்து இருக்க சத்யன் வீட்டுக்கு வரும் சீதா, வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி மகாலட்சுமியிடம் வந்து மன்னிப்பு கேட்க சொல்கிறாள். ஆனால் ராம், “எனக்கு மகாலட்சுமிக்கும் ஏகப்பட்ட பகை இருக்கு, என்னால மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க முடியாது ராம் கீழே குதிப்பதால் யாருக்கு நஷ்டம் எனக்கு என்ன வந்தது” என சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க: பழனியை எதிர்த்து போட்டியிடும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News