கார்த்திகை தீபம் அப்டேட்: கதிரை தேடி அலையும் கார்த்தி, தீபாவுக்கு செக் வைத்த ஐஸ்வர்யா

Karthigai Deepam Today's Episode Update: அதிரடியான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம், இன்று நடக்க போவது என்ன? இன்றைய எபிசோட்டின் முழு விவரம் இதோ.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 11:04 AM IST
  • போலீஸ் கார்த்தியை வெளியே அழைத்து கதிர் தப்பி ஓடி வந்த விஷயத்தை சொல்கின்றனர்.
  • பொம்மை வேஷத்தில் கதிர் தான் இருப்பான் என சொல்லி அங்கே தேடி வருகிறான்.
  • கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம் அப்டேட்: கதிரை தேடி அலையும் கார்த்தி, தீபாவுக்கு செக் வைத்த ஐஸ்வர்யா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்' சீரியல்

இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் போலீசிடமிருந்து தப்பித்து கல்யாணம் மண்டபத்துக்குள்ள நுழைந்த கதிர் பொம்மை வேஷம் போட்டுக் கொண்டு இருக்க அப்போதே அங்கு வரும் போலீஸ் பொம்மை வேஷம் போட்டுக் கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் போலீஸ் கார்த்தியை வெளியே அழைத்து கதிர் தப்பி ஓடி வந்த விஷயத்தை சொல்கின்றனர். 

மேலும் படிக்க | பழனியை எதிர்த்து போட்டியிடும் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்!

அவன் இங்க மண்டபத்தில் இருக்கக்கூட வாய்ப்புள்ளது ஆனால் நாங்க உள்ள வந்தா உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் ஆகையால் நீங்களே தேடிப் பாருங்க நாங்க வெளியே வந்தால் பிடித்துக் கொள்கிறோம் என சொல்ல கார்த்திக் உள்ளே சென்று கதிரை தேட ஆரம்பிக்கிறான். அப்போது பாத்ரூமில் ஏற்கனவே பொம்மை வேஷம் போட்டவர் சிக்கி இருக்க கார்த்தி கதவை திறந்து விட வெளியே வந்த அவர் நடந்த விஷயங்களை சொல்ல அப்போ பொம்மை வேஷத்தில் கதிர் தான் இருப்பான் என சொல்லி அங்கே தேடி வருகிறான். 

அதற்குள் கதிரை பார்த்த நட்சத்திரா அவனை அழைத்துச் சென்று தனது ரூமுக்குள் மறைத்து வைக்கிறாள். இதனால் கார்த்தி கதிரை பிடிக்க முடியாமல் போகிறது. அடுத்து அவன் ரூம் ரூமாக தேடிக் கொண்டிருக்க கதிர் நட்சத்திராவிடம் தனது செல்போன் காணாமல் போன விஷயத்தை சொல்ல அவள் செல்போனை தேடி வருகிறாள். 

இந்த நேரத்தில் கார்த்திக் எதிரே மீனாட்சி வர அவளிடம் கதிரை தேடும் விஷயத்தை சொல்ல கதிர் மட்டும் இப்போது சிக்கிக்கொண்டால் நட்சத்திரா பற்றிய எல்லா உண்மைகளும் வெளியே வந்துவிடும் இந்த கல்யாணமும் நின்று விடும் என சொல்கிறாள். 

மறுபக்கம் தீபா வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை வீட்டார் ஐஸ்வர்யா சொன்னது போல பரிசம் போட வந்திருப்பதாக சொல்லி பரிசம் போடுகின்றனர். அந்த மாப்பிள்ளை தீபாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க தீபா போட்டோ எதுக்கு என கேட்க உன்னை கட்டிக்க போறவன் தானே இதில் என்ன இருக்கு என சொல்லி போட்டோ எடுக்கிறான். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க தீபா மட்டும் சோகமாக இருக்கிறாள். பிறகு அந்த மாப்பிள்ளை ஐஸ்வர்யாவுக்கு தீபாவுடன் எடுத்த போட்டோவை அனுப்ப இதை பார்த்த ஐஸ்வர்யா தீபா சாப்டர் க்ளோஸ் என சந்தோஷப்படுகிறாள். 

அந்த நேரம் பார்த்து நட்சத்திரா போனை தேடிக் கொண்டு வர அவளிடம் ஐஸ்வர்யா இந்த போட்டோவை காட்டி நடந்த விஷயங்களை சொல்ல நட்சத்திராவும் சந்தோஷம் அடைகிறாள். 

அதன் தொடர்ச்சியாக ஜெயிலில் சிவா காட்டப்படுகிறான். அங்கு வரும் ராஜு தர்மலிங்கம் மண்டபம் பற்றி விசாரித்த விஷயங்களை சொல்ல சிவா இனி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டும் என சொல்கிறான். மேலும் கார்த்திக் தீபாவின் கழுத்தில் தான் தாலி கட்ட வேண்டும் என சொல்கிறான். 

அதன் பிறகு அந்த ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவாவின் பள்ளி பருவ நண்பன் என தெரிய வர அவன் மூலமாக சிவா ஜெயிலிலிருந்து வெளியே வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

 

மேலும் படிக்க | சூது கவ்வும் 2: படக்குழு வெளியிட்ட கலக்கலான புது போஸ்டர் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News