கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?

Problem Between Vadivelu And Vijayakanth: தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்துள்ளதை அடுத்து நடிகர் வடிவேலு அவரை நேரில் வந்து பார்க்காதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2023, 05:18 PM IST
  • விஜயகாந்தும் வடிவேலும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
  • இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக பேசுவதில்லை.
  • விஜயகாந்தின் இறுதி அஞ்சலிக்கு வடிவேலு வராதது ஏன்?
கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு! இருவருக்கும் என்னதான் பிரச்சனை?  title=

நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக நேற்று (டிசம்பர் 28) உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு வந்துள்ளனர். திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலர் தேமுதிக அலுவலகத்திலும், தீவுத்திடலிலும் வந்து விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த வரவில்லை. 

வடிவேலும் விஜயகாந்தும்..

நகைச்சுவை நடிகர் வடிவேலுவும், விஜயகாந்தும் மதுரை நகரில் இருந்து வந்தவர்கள். இருவருமே இருவரும் சின்ன கவுண்டர், தவசி, எங்கள் அண்ணா, வல்லரசு, நரசிம்மா என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். வடிவேலுவிற்கு சில படங்களில் நடிக்க இவர் வாய்ப்பு கேட்டு காெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், 2011ஆம் அண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார், வடிவேலு. ஒற்றுமையாக இருந்த இவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபம், திமுகவினரால் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வடிவேலுவின் ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கையின் போது உடனிருந்த விஜயகாந்தையே இப்படி பேசிவிட்டாரே என மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. 

பின்னணி என்ன?

வடிவேலுவும் விஜயகாந்தும் நல்ல நட்புடனேயே பழகி வந்தனர். இவர்கள் இருவரது வீடுகளும் சாலிகிராமத்தில் இருந்ததாகவும், அப்போது வடிவேலு தனது காரை விஜயகாந்தின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை ஏற்பட்டபோது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தார். அப்போது, சங்க கூட்டத்திற்கு அழைத்தால் வடிவேலு வராமல் இருந்ததாகவும், இதனால் இவர்களுக்குள் இருந்த விரிசல் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, விஜயகாந்த் அதிமுக கட்சியில் இணைந்த போது, எதிர் கட்சியான திமுகவில் இணைந்த வடிவேலு விஜயகாந்திற்கு எதிராக பேச ஆரம்பித்தார். 

வடிவேலு மீது வெறுப்பு காட்டாத கேப்டன்..

நடிகர் விஜயகாந்தை பலரும் அவரது நல்ல குணத்திற்காக இன்றும் நினைவில் வைத்துள்ளனர். வடிவேலு, தன்னை குறித்து வேறு ஒரு கட்சிக்காக எவ்வளவு இழிவாக பேசினாலும், அது குறித்து ஒரு நாளும் எந்த பத்திரிக்கையிலும் பேசாதவராக இருந்தார், கேப்டன் விஜயகாந்த். வடிவேலு-விஜயகாந்த் பிரிவிற்கு பிறகு வடிவேலுவிற்கு திரைத்துறையில் பல பிரச்சனைகள் எழுந்தது. அப்போது அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். அந்த சமயத்தில் கூட, “இவன் பிறவியிலேயே சிறந்த நடிகன். இவன் தொடர்ந்து நடிக்க வேண்டும்” என விஜயகாந்த் கூறியதாக அவரது மனைவி பிரேமலதா சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்?

கடைசி வரை கேப்டன் முகத்தை பார்க்காத வடிவேலு..

நடிகர் விஜயகாந்த், நுரையீரல் அழற்சி காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், பொது மக்கள், ரசிகர்கள், தாெண்டர்கள், திரை பிரபலங்கள் என பல லட்சம் பேர் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். இதையடுத்து, இன்று அதிகாலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது. இங்கும் பல பிரபலங்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் வடிவேலு மட்டும் இறுதிவரை விஜயகாந்தை பார்க்க வரவே இல்லை. 

நடிகர் வடிவேலுவிற்கும் விஜயகாந்திற்கும் இடையே என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீதே மர்ம நபர்கள் செருப்பை எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடிவேலு வந்தால் அவரை விஜயகாந்த் ரசிகர்கள் எதிர்ப்பார்கள் என்றும், அவர் மீது தாக்குதல்கள் நடத்தவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், வடிவேலு விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த வரவில்லை என்றும் பேசப்படுகிறது. 

விஜயகாந்தின் உடல், தேமுதிக அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்..பேசிய டைலாக்..வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News