விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்..பேசிய டைலாக்..வைரலாகும் வீடியோ!

Vijayakanth Last Movie: நடிகர் விஜயகாந்தின் உயிரிழப்பு தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் கடைசியாக நடித்த படத்தில் அவர் நடித்த காட்சி வைரலாகி வருகின்றன. 

Written by - Yuvashree | Last Updated : Dec 29, 2023, 12:24 PM IST
  • விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்.
  • தன் மகனுடன் சேர்ந்து நடித்தார்.
  • அவர் பேசிய டைலாக் வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்..பேசிய டைலாக்..வைரலாகும் வீடியோ!  title=

நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நேற்று (டிசம்பர் 28) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, தமிழக மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

விஜயகாந்த் காலமானார்:

தமிழக மக்களால், ‘கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன்’ என பல பெயர்களால் அழைக்கப்பட்டவர், விஜயகாந்த். 1979ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படம் மூலம் அறிமுகமான இவர், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அவற்றில் பல படங்களை ஹிட்டாக்கியுள்ளார். தன் படங்கள் மூலம் மக்கள் மனங்களில் இடம் பெற்றது மட்டுமன்றி, பல நூறு பேருக்கு எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் உதவிகளையும் செய்துள்ளார். 

மேலும் படிக்க | மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்

அரசியல் மீது நாட்டம் கொண்ட இவர், 2005ஆம் ஆண்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 2016ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால், அரசியல்-சினிமா என எதிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இவருக்கு வெளிநாட்டிலும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 28) தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, இவர் குறித்து அவரது ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

விஜயகாந்த் நடித்த கடைசி படம்..

விஜயகாந்திற்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகர் அழகர் சாமி என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில், சண்முக பாண்டியன் 2015ஆம் ஆண்டு நடிகராக ‘சகாப்தம்’ படத்தில் அறிமுகமானார் . இதையடுத்டு, மதுர வீரன், மித்ரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார் இதில், சகாப்தம் படத்தில் நடிகர் விஜயகாந்த் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து அவர் மகன் நடித்த ‘தமிழன் என்று சொல் படத்திலும் அவருடன் சேர்ந்து நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அப்படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கேப்டன் பேசிய கடைசி டைலாக்..

‘தமிழன் என்று சொல்’ படத்தில் அவர் பேசிய “ஜெயிச்சா உன்ன நாடே பார்க்கப்படும், ஜெயிச்சவனோட மொழி பேசப்படும்” என்று விஜயகாந்த் பேசியுள்ள டைலக், வீடியோ வடிவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ஷேர் செய்யும் ரசிகர்கள், கேப்டன் குறித்த நினைவுகளை கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News