Intimate marriage: சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?

நடிகர் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் ப்ரணிதா சுபாஷ்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 31, 2021, 05:23 PM IST
  • நடிகை ப்ரணிதா சுபாஷ்.திடீர் திருமணம்
  • பெங்களூருவில் மே 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது
  • தொழிலதிபர் நிதின் ராஜுவை மணந்தார் சகுனி பட நாயகி
Intimate marriage: சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?   title=

நடிகர் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் ப்ரணிதா சுபாஷ்.

யாருக்கும் தெரிவிக்காமல் அவர் திடீரென்று திருமணம் செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த நிதின் ராஜு என்ற தொழில் அதிபரை கரம் பிடித்திருக்கிறார் நடிகை ப்ரணிதா.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரணிதா சுபாஷ், அருள்நிதியின் உதயன் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரணிதா. ஹிந்தியில் அவர் நடித்த முதல் படம் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

actress

தற்போது ஹங்காமா 2 ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பிரணிதா, திடீரென்று திருமணம் செய்துக் கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read | ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி, குவியும் பாராட்டுகள்

பிரணிதாவின் கணவர் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜு. இருவருக்கும் நேற்று திருமணம் நடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யாருக்கும் திருமண அழைப்பு விடுக்கவில்லை. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரணிதா, தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அதில், 2021 மே 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டோம் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக எப்போது திருமணம் என்பதை முடிவு செய்யாததால், முன்னதாகவே அறிவிக்கமுடியவில்லை. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு எங்களுக்கு எப்போதும் தேவை. , மேலும் விஷயங்கள் சிறப்பாக காலம் கனியும்போது அனைவருடனும் ஒன்றாகக் கொண்டாடுவோம் என்று நம்புகிறோம். அன்புடன், பிரணிதா & நிதின்'' என்று தெரிவித்துள்ளார் பிரணிதா.

Also Read | "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News