Shocking News: "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!

தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவரின் குடும்பத்தில் 14 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி, கோவிட் பாதிப்பின் நிதர்சன நிலையை எடுத்துச் சொல்வதாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2021, 06:38 AM IST
  • பிரபல திரைப்பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா
  • 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா
  • ‘மேயாதமான்’ திரைப்பட இயக்குநருக்கு வந்த சோதனை
Shocking News: "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!   title=

சென்னை: தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஒருவரின் குடும்பத்தில் 14 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி, கோவிட் பாதிப்பின் நிதர்சன நிலையை எடுத்துச் சொல்வதாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. கோவிட் நோய் ஏற்படுவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய சீர்குலைவு ஒருபுறம் என்றால், அது ஏற்படுத்தும் மனரீதியிலான பாதிப்பு மிகவும் அதிகம். 

தனது குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 20 நாட்களாக தான் மன உளைச்சலில் இருந்ததாக இயக்குநர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேர் பாதிப்பு, 486 பேர் உயிர் இழப்பு!!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தில் பணிபுரிந்தவர் இயக்குநர் ரத்தின குமார். நடிகை அமலாபால் நடித்த ’ஆடை’, வைபவ், ப்ரியா பவானிசங்கர் நடித்த ‘மேயாதமான்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் ரத்தினகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ரத்தினகுமாரின் குடும்பத்தில் 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த 20 நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது குடும்பத்தினர் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் நிம்மதியாக இருப்பதாக இயக்குநர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

’15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, மாமியார் என குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். கடந்த 20 நாட்களாக ஏற்பட்ட மன உளைச்சல்களை கடந்து மீண்டும் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ரத்தினகுமார்.

Also Read | முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News