ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!

இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2024, 06:00 PM IST
  • இன்று பிறந்தநாள் கொண்டாடும் வசந்த் ரவி.
  • அடுத்து வெப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
  • விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்! title=

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’.  ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இன்று (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள். இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். ”என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.  அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. 

மேலும் படிக்க | எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு  மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

’ஜெயிலர்2’ வருகிறது என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர்2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் ,“பார்ட்2க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட் படங்கள். ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார். 

மேலும் படிக்க | பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News