கார்த்திகை தீபம்: ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்.. தீபாவுக்கு நேரும் அவமானம்

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 18, 2024, 02:45 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திகை தீபம்: ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்.. தீபாவுக்கு நேரும் அவமானம் title=

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால தான் இங்கே கூட்டி வந்ததாக சொல்லி செல்கிறான். இதைத்தொடர்ந்து மறுபக்கம் அறியா ஆனந்திடம் நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு உங்களுக்கும் எனக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் கல்யாணம் என்று சொல்கிறாள். 

அண்ணன் தங்கை ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க இல்ல நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்ல ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான். 

மேலும் படிக்க | பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!

மறுபக்கம் மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் ராஜேஸ்வரி திட்டம் போட்டு தான் உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள். 

ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். மீனாட்சி சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும் நீ வா என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி பட நடிகை! என்ன ஆச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News