மீனாட்சி பொண்ணுங்க சீரியல்: சக்திக்கு வந்த பரிதாப நிலை.. வெற்றி கல்யாணத்தில் என்ன நடக்கும்?

Meenakshi Ponnunga Today Episode: சக்திக்கு வந்த பரிதாப நிலை.. வெற்றி கல்யாணத்தில் என்ன நடக்கும்? மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2023, 01:04 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியலை எங்கு எப்படி பார்ப்பது?
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கும்?
மீனாட்சி பொண்ணுங்க சீரியல்: சக்திக்கு வந்த பரிதாப நிலை.. வெற்றி கல்யாணத்தில் என்ன நடக்கும்? title=

Meenakshi Ponnunga TV Series: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

இன்றைய எபிசோட்: மீனாட்சி பொண்ணுங்க
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி கல்யாண கோட் சூட் போட ஒப்புக்கொள்ள மாட்டான் என்று சரண்யா சக்தியிடம் சொல்கிறாள். ஆனால் காஸ்டியூமர் வீட்டிற்கு வர வெற்றி பூஜாவின் டிரஸ்ஸுக்கு மேட்ச்சாக கோட் சூட் எல்லாம் செலக்ட் செய்ய இதை பார்த்து சக்தி வருத்தம் அடைகிறாள்.

அடுத்ததாக சக்தி சாமி கும்பிட்டு அவளின் இக்கட்டான சூழ்நிலையை சாமியிடம் சொல்கிறாள். பிறகு அனைவரும் ரிசப்ஷனுக்கு கிளம்ப தயாராக இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் பூஜா சக்தியிடம் இன்று தான் நீ இந்த வீட்டில் இருக்கும் கடைசி நாள் நன்றாக இந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொள் என்று கிண்டலாக சொல்லிவிட்டு போகிறாள். ரங்கநாயகி சக்தியை தன்னுடன் காரில் வரச் சொல்கிறாள். மேலும் மனம் மாறி விட்டேன் என்று நினைக்காதே, கல்யாணம் முடியும் வரை நீ என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று ரங்கநாயகி சொல்கிறாள்.

மேலும் படிக்க: நான் வாய் திறந்தா சமந்தா மானம் போய்டும்.. விளாசும் தயாரிப்பாளர்! என்ன நடந்தது?

மறுபக்கம் பூஜா தன் தோழிகளிடம் சக்தியை எப்படியாவது இன்சல்ட் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறாள். ரிசப்ஷனுக்கு காரில் பூஜா வந்து இறங்குகிறாள். சக்தி கல்யாணத்தில் நிறைய வேலைகள் செய்கிறாள்.

இதனால் ஊர் மக்கள் சக்தியின் நிலைமை பற்றி பேச இதை கேள்விப்பட்ட செல்வமுருகன் ரங்கநாயகியிடம் சொல்ல, அவள் இதை பொருட்படுத்தவில்லை, வெற்றி நண்பர்களுடன் காரில் வந்து இறங்குகிறான்.

மேலும் படிக்க: "குக் வித் கோமாளி 4" அடுத்த வார கலக்கல் எபிசோட், வெளியான மாஸ் அப்டேட்

ரங்கநாயகி வெற்றிக்கு சக்தியை ஆரத்தி எடுக்க சொல்கிறாள். சக்தி வருத்தத்துடன் வெற்றிக்கு ஆரத்தி எடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

"மீனாட்சி பொண்ணுங்க" தொடரை எங்கு பார்ப்பது?
மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பிரபலமாக சீரியல் "மீனாட்சி பொண்ணுங்க" என்ற தொடர் 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் டிஜிட்டல் தளமான ZEE5 இல் ஒளிபரப்பப்படுகிறது. இந்தத் தொடர் 1 ஆகஸ்ட் 2022 அன்று முதல் ஒளிப்பராகி வருகிறது. இதில் அர்ச்சனா சௌந்தர்யா ரெட்டி மற்றும் ஆர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஜீ தெலுங்கு தொடரான ராதம்மா குத்துருவின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

மேலும் படிக்க: விரைவில் முடிவுக்கும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News