அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை: சிம் கார்டில் இந்த தவறை செய்யாதீர்கள்

உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை வேறொருவருடன் பகிர்ந்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாக நேரிடும், அது உங்களை சட்ட சிக்கலில் சிக்க வைக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2022, 05:20 PM IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழரா நீங்கள்?
  • சிம் கார்ட் பற்றிய ஒரு முக்கிய தகவலை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
  • மக்கள் சிம் கார்டுகளை வாங்கி மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது: ஐக்கிய அரபு அமீரக சைபர் கிரைம் நிபுணர்கள்.
அமீரகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை: சிம் கார்டில் இந்த தவறை செய்யாதீர்கள் title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழரா நீங்கள்? சிம் கார்ட் பற்றிய ஒரு முக்கிய தகவலை தெரிந்துகொள்வது அவசியமாகும். உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை வேறொருவருடன் பகிர்ந்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாக நேரிடும், அது உங்களை சட்ட சிக்கலில் சிக்க வைக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் சிம் கார்டுகளை வாங்கி மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்றும் தங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டுகளை வேறு யாரேனும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஐக்கிய அரபு அமீரக சைபர் கிரைம் நிபுணர்கள் அறிவிறுத்தியுள்ளார்கள். அந்த எண்ணைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றம் நடந்தால், அந்த சிம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிம் கார்டை வேறு யாரோ பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை நிரூபிக்க நேரம் ஆகலாம் என்பதால் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிமையாளருக்குத் தெரியாமல், அவரது சிம் கார்டை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட பல குற்றங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் சிம் கார்ட் உரிமையாளர் தங்கள் சிம் கார்டை, தங்கள் சக ஊழியர் அல்லது நண்பருடன் பகிர்ந்து கொண்டதால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ நிலையம், சுகாதார பாதுகாப்பு திட்டம் 

ஒரு எண்ணை பயன்படுத்தாத பட்சத்தில், அந்த எண்ணின் இணைப்பை சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றிலிருந்து நீக்குவது மிக முக்கியம் என சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உபயோகத்தில் இல்லாத எண்களை பயன்படுத்தி பலர் தவறான செயல்களை செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. 

சமீபத்தில் தலைமறைவான ஒரு பணிப்பெண், ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். கணக்குடன் தொடர்புடைய தொலைபேசி எண் மூலம் பணிப்பெண்ணைக் கண்டுபிடிக்க போலீஸார் முயன்றபோது, ​​அந்த தொலைபேசி எண் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதனால் விசாரணை தடைபட்டது.

சமூக ஊடகங்கள் மூலம் சைபர் குற்றங்கள் செய்யப்படுகின்றன. மேலும் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு அமீரக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள், மற்றவர்களை அச்சுறுத்தவோ அல்லது மோசடி செய்யவோ வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது மிக அவசியம் என்று சைபர் கிரைம் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

எதிர்காலத் தேதியில் ஆதாரமாகப் பயன்படுத்த வேண்டுமானால், வாய்ஸ் மெசேஜ்களுக்கு பதிலாக குறுஞ்செய்திகளைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வாய்ஸ் மெசேஜ்களை டிரான்ஸ்கிரிப்ட் செய்வது மூன்றாம் தரப்பினரால் செய்யப்படுவதால் நீண்ட நேரம் எடுக்கும் என்பது இதற்கான காரணமாக உள்ளது. 

போலி கால்கள், செய்திகள், சமூக ஊடக பயன்பாடு, வங்கி பரிமாற்றங்கள் என பலவற்றை சிம் கார்ட் கொண்டு செய்ய முடியும் என்பதால், ஒருவர் தன்னுடைய சிம் கார்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும். இதை பிறருடன் பகிர்வது தேவையற்ற பிரச்சனைகளை கொண்டுவரக்கூடும். ஆகையால், அமீரகத்தில் வசிக்கும் எவரும் இந்த தவறை கண்டிப்பாக செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இதையெல்லாம் செய்யக்கூடாது: முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சவூதி அரேபியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News