கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள்

Sri Lanka Crisis: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி  அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 16, 2022, 10:13 AM IST
  • தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டது.
  • கடலோர காவல் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
  • பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளன.
கொந்தளிப்பில் இலங்கை; தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்கள் title=

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் நிச்சயம்மற்ற தன்மை காரணமாக, தமிழகத்தை நோக்கி படை எடுக்கும் ஈழத் தமிழர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை,  பொருளாதார நெருக்கடி  ஆகியவை அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளன.  அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க குடியாமல் தவிக்கும் அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். 

ஏற்கனவே 29  குடும்பங்களை சேர்ந்த 110 நபர்கள் அகதிகளாக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில்,  நேற்று தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை 1ம் தீடை பகுதியில் 2 குடும்பங்களை சேர்ந்த இரண்டு சிறுவர்கள், ஒரு சிறுமி  உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர  காவல் படை மீட்டு கரை கொண்டு வந்த பின்னர் கடலோர காவல் குழுமம்  போலீசார் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

மேலும் படிக்க | Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே

மேலும் அகதிகளாக வந்தவர்களை கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு  முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.சுமார் ஒரு வார காலம் முன்னதாக, இலங்கை வவுனியா மாவட்டத்திலிருந்து இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் இரண்டு குழந்தைகள் என ஆறு பேர் பிளாஸ்டிக் படகில் மன்னார் பகுதியில் இருந்து 4 லட்ச ரூபாய் கொடுத்து புறப்பட்டு, தனுஷ்கோடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா...

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News