விரைவில் சிங்கப்பூரில் குரங்கம்மை தொற்று கண்டறியப்படலாம்: சிங்கப்பூர் அமைச்சர்

வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கு அம்மை காய்ச்சல் கண்டறியப்பட்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங்க் யே குங்க் தெரிவித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2022, 04:53 PM IST
  • சிங்கப்பூரில் குரங்கு அம்மை பரவக்கூடும்.
  • சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் இதை தெரிவித்தார்.
  • உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது.
விரைவில் சிங்கப்பூரில் குரங்கம்மை தொற்று கண்டறியப்படலாம்: சிங்கப்பூர் அமைச்சர் title=

சிங்கப்பூர்: வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கு அம்மை காய்ச்சல் கண்டறியப்பட்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங்க் யே குங்க் தெரிவித்தார். சிங்கப்பூர் மக்கள் பரவலாகப் பயணம் செய்வதாலும், சிங்கப்பூர் வணிக மற்றும் சர்வதேச மையமாக இருப்பதாலும் இதற்கான சாத்தியக்கூருகள் உள்ளதாக அவர் சனிக்கிழமை (மே 28)தெரிவித்துள்ளார். 

எனினும், தேவையான நெறிமுறைகள் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் சிங்கப்பூரில் உள்ளது என்று அவர் உறுதியளித்தார்.

ஃபேஸ்புக் பதிவில், திரு ஓங், "கோவிட்-19 போன்ற ஒரு தொற்றுநோயாக குரங்கு அம்மை இருக்க வாய்ப்பில்லை. இது பெரும்பாலும் நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது. மேலும் கோவிட்-19 போல இது காற்றில் பரவாது. கொரோனா வைரசை போல இது விரைவாகவும் அதிகமாகவும் பரவாது." என்று கூறினார்.

"நான் சமீபத்தில் கலந்து கொண்ட உலக சுகாதார மாநாடு உட்பட பல இடங்களில், இது அதிக ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில் இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில இடங்களில் மட்டுமே இருக்கும் ஒரு அரிய நோயாக இருக்காது, ஆனால் உலகின் பல பகுதிகளில் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இது பரவி வருகிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | குரங்கு அம்மை: அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பூசி பற்றிய முழு விவரங்கள் இதோ 

20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கொறித்துண்ணிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவிய வைரஸ் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் பின்வரும் ஆரம்ப அறிகுறிகளை அனுபவிக்கலாம்: 

காய்ச்சல், குளிர், தலைவலி, தசை வலி மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள்.

நோயின் முதல் அறிகுறிகளை அனுபவித்த சில நாட்களுக்குப் பிறகு, தட்டம்மையில் ஏற்படுவது போன்ற சொறி போன்ற அறிகுறிகள் பொதுவாக தோன்றும். முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இது பரவுகிறது. சொறி இறுதியில் சிரங்குகளை உருவாக்குகிறது. இந்த சிரங்குகள் பின்னர் விழுந்துவிடும்.

பொதுவான குரங்கு அம்மை சொறி புண்கள் உடல் முழுவதும் பரவுவதற்கு முன்பு முகம்/வாய் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளில் உருவாகிறது. இது ஒரு பொதுவான சிக்கன் பாக்ஸ் சொறி போல் தோன்றலாம், எனவே மருத்துவரின் மறுபரிசீலனை முக்கியமானது என்று திரு ஓங் கூறினார்.

"புதிய விவரிக்க முடியாத சொறி உள்ளவர்கள், நீங்கள் சமீபத்தில் பயணம் செய்யாவிட்டாலும், உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும். இதனால் பரிசோதனை செய்யப்பட்டு நோய் கண்டறிதலும் ஆரம்ப சிகிச்சையும் விரைவாக நடக்கும்."

"பெரும்பாலும் இது சிக்கன் பாக்ஸ் போன்ற மற்றொரு பொதுவான நோயால் ஏற்படுகிறது. ஆனால் உங்களுக்கு குரங்கு அம்மை காய்ச்சல் இருந்தால், நீங்கள் சரியான கவனிப்பைப் பெற்று இந்த நோய் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்" என்று திரு ஓங் கூறினார்.

குரங்கு அம்மை காரணமாக சிறிய சதவீத நோயாளிகளுக்கு கடுமையான நோய் மற்றும் இறப்புகளும் ஏற்படலாம். 

காய்ச்சலால் உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது பாக்ஸ் போன்ற சொறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும், அனைத்து நேரங்களிலும் முகத்தைத் தொடுவதற்கு முன் சோப்பு கொண்டு கைகளைக் கழுவுதல் உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தின் உயர் தரத்தை பராமரிக்கவும் சுகாதார அமைச்சகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியது.

மேலும் படிக்க | Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News