பிரதமரை நீக்க அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷே ஒப்புதல் - இலங்கையில் பரபரப்பு

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்‌ஷேவை நீக்குவதற்கு அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷே ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 29, 2022, 10:27 PM IST
  • பிரதமரை நீக்க அதிபர் ஒப்புதல்
  • பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் மகிந்த ராஜ்பக்‌ஷே
  • இலங்கை அரசியலில் புதிய பரபரப்பு
பிரதமரை நீக்க அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷே ஒப்புதல் - இலங்கையில் பரபரப்பு title=

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர். பிரதமரும், அதிபரும் உடனடியாக பதவி விலக வேண்டுமெனவும்வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால், பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என மகிந்த ராஜபக்‌ஷே தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் கூறியிருந்தார்.இந்தச் சூழலில் அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷேவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தினார்.

Srilanka Crisis

பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், “புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷே இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | போர் என்பது 21ம் நூற்றாண்டில் மிகவும் அபத்தமானது: ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ்

நாட்டை நிர்வகிப்பதற்கு உதவுவதற்காக தேசிய சபை ஒன்றை நியமிப்பதற்கும் அதிபர் ஒத்துக்கொண்டிருக்கிறார். அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காலை அதிபர் பேசிவிட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்” என்றார். 

Srilanka Crisis

பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்‌ஷேவை நீக்குவதற்கு அதிபர் கோத்தபயா ராஜபக்‌ஷே முடிவெடுத்திருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News