UAE Monkeypox Update: 4 பேர் புதிதாக குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டனர்

Monkeypox in UAE: தற்போது பதிவாகியுள்ள 4 நோயாளிகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2022, 06:21 PM IST
  • உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு புதிய குரங்கு அம்மை தொற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் தொற்றுநோயியல் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த தொற்று பரவல் கண்டறியப்பட்டது.
UAE Monkeypox Update: 4 பேர் புதிதாக குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டனர் title=

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு புதிய குரங்கு அம்மை தொற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தொற்றுநோயியல் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த தொற்று பரவல் கண்டறியப்பட்டது.

தற்போது பதிவாகியுள்ள 4 நோயாளிகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் கண்டறியப்பட்ட தொற்று எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. 

சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அனைத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. பயணம் செய்யும்போதும், கூட்டமாக கூடும்போதும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

தொற்று குறித்த விசாரணை, தொடர்புகளை பரிசோதித்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்தது.

மேலும் படிக்க | அபுதாபி வாழ் தமிழர்களே அலர்ட்: இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை 

குரங்கு அம்மை தொற்று பரவக்கூடியது, ஆனால் கோவிட்-19 உடன் ஒப்பிடும்போது அதன் பரவல் குறைவாகவே இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். "இது பெரும்பாலும், பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்புகள் மூலமும்,  உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களுடனான தொடர்புகள் மூலமும் மனிதர்களுக்கு பரவுகிறது. இது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பரவக்கூடும் ”என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை அமைச்சகம் முன்பு விவரித்திருந்தது. ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ வழிகாட்டியை மேற்கோள் காட்டி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகள் "21 நாட்களுக்கு குறையாமல்" வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மை என்பது பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் அறிகுறிகளுடன் சுய வரம்புக்குட்பட்ட நோயாகும். 

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை  காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் தொடங்குகிறது. இது நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது (லிம்பேடனோபதி). இது பெரியம்மையால் ஏற்படாது.

சின்னம்மை, தட்டம்மை, பாக்டீரியா தோல் நோய்த்தொற்றுகள், சிரங்கு, சிபிலிஸ் மற்றும் மருந்துகளுடன் தொடர்புடைய ஒவ்வாமைகளுடன் குரங்கு அம்மை தொற்றை குழப்பாமல் இருப்பது முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News