Ambedkar Jayanti : அம்பேத்கர் கடைசி வரை 22 கடைப்பிடித்த சத்தியங்கள்! கேட்டா அசந்து போவீங்க..

Ambedkar Jayanthi 2024 : ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், இவர் கடைப்பிடித்த 22 சத்தியங்களை பற்றி பார்க்கலாம். 

Ambedkar Jayanthi 2024 : இந்தியாவின் இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தியவர், சட்டமேதை அம்பேத்கர். அரசியல் தலைவர், ஆசிரியர், கல்லூரி முதல்வர், பங்குச்சந்தையின் வர்த்தக ஆலோசகர், வழக்கறிஞர், கணக்காளர் என என்னற்ற துறைகளில் நிபுணராக இருந்த இவரது முழு பெயர் பீமாராவ் ராம்ஜீ அம்பேத்கர். இவர், 1956ஆம் ஆண்டில் சில சத்திய பிரமாணங்களை எடுத்துக்கொண்டார். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

1956ஆம் ஆண்டு நாக்பூரில் நடைப்பெற்ற ஒரு நிகழ்வில் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார். அப்போது அது குறித்த 22 சத்தியங்களை எடுத்துக்கொண்டார். அவை என்னென்ன தெரியுமா?

2 /7

1.பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களை வணங்கவும் மாட்டேன். 2.கடவுளின் அவதாரம் என்று கூறப்படும் ராமர் மற்றும் கிருஷ்ணர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களை வணங்க மாட்டேன். 3.விநாயகர், கௌரி மீது மற்றும் பிற இந்து பெண் கடவுள்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அவர்களை துதிக்கவும் மாட்டேன். 4.கடவுளின் மறுபிறப்பின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. 5.விஷ்ணுவின் மறு பிறப்புதான் புத்தர் என்பதை நான் நம்ப மாட்டேன். இது வெறும் முட்டாள்தனம் மற்றும் பொய்ப் பிரச்சாரம் என்று நான் கருதுகிறேன். 

3 /7

6.பிண்டம் கொடுக்க மாட்டேன் 7.புத்தரின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மீறும் வகையில் நான் செயல்பட மாட்டேன். 8.பிராமணர்கள் எந்தச் சடங்குகளையும் நடத்த நான் அனுமதிக்க மாட்டேன். 9.மனிதனின் சமத்துவத்தில் நம்பிக்கை கொள்வேன். 10.சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சி செய்வேன்.

4 /7

11.புத்தரின் உன்னதமான 8 வழிகளை பின்பற்றுவேன். 12.புத்தர் வகுத்த பத்து பராமித வழிகளை நான் பின்பற்றுவேன். 13.அனைத்து உயிர்களிடத்தும் இரக்கமும் அன்பும் கருணையும் கொண்டு நடந்து கொண்டு அவற்றைப் பாதுகாப்பேன்.

5 /7

14.நான் திருட மாட்டேன். 15.பொய் கூற மாட்டேன் 16.கொடிய பாவங்களை செய்ய மாட்டேன் 17.மது, போதை பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்துகளை உபயோகிக்க மாட்டேன்  

6 /7

18. அன்றாட வாழ்க்கையில் இரக்கத்தையும் அன்பையும் கடைப்பிடிப்பேன். 19.சமத்துவமின்மையின் அடிப்படையில், மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையூறு விளைவிக்கும் இந்து மதத்தை கைவிட்டு, புத்த மதத்தை எனது மதமாக ஏற்றுக்கொள்கிறேன்.  

7 /7

20.புத்தரின் தர்மத்தை மட்டுமே உண்மையான மதம் என்று உறுதியாக நம்புகிறேன். 21.புத்த மதத்தினால் புதிதாக பிறந்ததாக கருதுகிறேன் 22.புத்த தம்மத்தின் போதனைகளின்படி நான் இனிமேல் என் வாழ்க்கையை வாழ்வேன் என்று உறுதியளிக்கிறேன்.