மலையாள படத்திற்கு இசை அமைக்கும் அனிருத்! யார் படம் தெரியுமா?

Anirudh Ravichander: பிரபல இசையமைப்பாளர் அனிருத், மலையாள படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத். இவர், தற்போது பான் இந்தியா அளவில் பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படுகிறார். அனிருத், தற்போது மலையாள திரையுலகிற்குள்ளும் பிரவேசிக்க உள்ளார். 

1 /7

3 படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர், அனிருத். இவர், கடந்த 11 ஆண்டுகளில் அபரிபிதமான வளர்ச்சி பெற்ற இசையமைப்பாளராக உள்ளார். 

2 /7

சமீபத்தில் வெளியான ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து, இவர் பான் இந்திய அளவில் அதிகம் தேடப்படும் பிரபலமான மாறினார். 

3 /7

அனிருத்தின் இசையில் கடந்த ஆண்டு வெளியான அனைத்து பாடல்களும், படங்களுமே ஹிட் அடித்தன. இவர், அடுத்தடுத்து பல பெரிய இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

4 /7

அனிருத், படங்களுக்கு இசையமைப்பது மட்டுமன்றி அவ்வப்போத் இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். 

5 /7

அனிருத், தற்போது தனது இசை கச்சேரி பயணத்தை தொடங்க இருக்கிறார். இந்த பயணத்தின் முதல் நகரமே துபாய்தான் என அவர் அறிவித்துள்ளார். 

6 /7

அனிருத், தனது இசைப்பயணம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது தான் ஒரு மலையாள படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளதாக கூறியிருக்கிறார். 

7 /7

இவர், மலையாளத்தில் பெரிய நட்சத்திரம் ஒருவரின் படத்திற்கு இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது.