CBSE 10th,12th Date Sheet: CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

CBSE Class 10, 12 Date Sheet 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10, 12 ஆம் வகுப்பு தேர்வு 2023 அட்டவணையை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ 2023 தேர்வு பிப்ரவரி 15, 2022 முதல் தொடங்கி ஏப்ரல் 5, 2023 வரை நடைபெறும். அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும். மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு 2023 வாரியத் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில்- cbse.gov.in இல் சரிபார்த்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

1 /8

2022-2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் (10, 12ஆம் வகுப்பு) எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் நிலவிவந்தது. இந்நிலையில், தேர்வுகள் தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பானது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

2 /8

10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  

3 /8

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர்.

4 /8

12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி முடிவடைகிறது. 

5 /8

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு தொழில்முனைவோர் தாளில் தொடங்கி உளவியல் தாளுடன் முடிவடைகிறது. தேர்வுகளானது காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது.

6 /8

தேர்வு அட்டவணை குறித்து முழுமையாக அறிய: cbse.gov.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களை க்ளிக் செய்ய வேண்டும்.

7 /8

தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பை cbse.nic.in என்ற  இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

8 /8

முன்னதாக, செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று வாரியம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.