Children of war: ஓவியம் மூலம் அகதிகளின் நிலையை வெளிப்படுத்தும் உக்ரேன் குழந்தைகள்

ஒரு உக்ரேனிய சிப்பாய் துப்பாக்கியின் வழியாகப் பார்க்கும் ஓவியம், போரின் நீட்சியைக் காட்டுகிறது. கருப்பு முடிக்கு அலங்காரமாக சிவப்பு மலர்கள் என இயற்கையையும் போர்ச்சூழலையும் இணைக்கும் குழந்தைகளின் ஓவியங்கள் வரைகலையாய் மனதை நெருகிறது.
 
இந்த 'போரின் குழந்தைகள்' தங்களைச் சுற்றியுள்ள மரணத்தையும் அழிவையும் சமாளிக்கும் ஒரு வழிமுறையாக வரைந்த சில ஓவியங்கள்...

1 /6

ஒரு மாதத்திற்கு முன்பு ரஷ்ய துருப்புக்கள் படையெடுத்தபோது ஆர்ட்டெம் மற்றும் அனஸ்டாசியா பைகோவெட்ஸ் உக்ரைனின் தலைநகரான கியேவிலிருந்து வெளியேறினர். நாட்டின் மேற்குப் பகுதிக்கு 37 மணிநேர பயணத்தில், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆன்லைன் கேலரிக்கான யோசனையைத் தூண்டி, அவர்களின் ஆறு வயது மகளின் எண்ணங்களை வரைய ஊக்கப்படுத்தினர். (Photograph:Instagram  

2 /6

அப்போதிருந்து, அவர்களின் Instagram கணக்கு @uakids.today ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக பயனர்களை ஈர்த்துள்ளது. போரில் சிக்கிய குழந்தைகள் அனுப்பிய டஜன் கணக்கான படங்கள் வெளியாகின.   (Photograph:Reuters)

3 /6

பெற்றோரை உறவினர்களை சித்தரிக்கும் படங்கள் (Photograph:Reuters)

4 /6

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தப்பிச் சென்ற 3.3 மில்லியன் உக்ரேனிய அகதிகளில் பாதி பேர் குழந்தைகள் என்று ஐரோப்பிய ஒன்றியம் கணக்கிடுகிறது. (Photograph:Reuters)

5 /6

பூக்களும் தோட்டாக்களும் என குழந்தைகளின் கண்ணோட்டம் இரு முனைகளிலும் இருப்பதைக் காட்டும் படம் (Photograph:Instagram)

6 /6

பிப்ரவரி 24 அன்று, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தொடங்கியது ரஷ்யா   (Photograph:Instagram