மதம்கொண்ட யானை... அகமதாபாத்தை அலறவிட்ட ரோஹித் - அம்பயரிடம் சீன் காட்டிய மாஸ் சம்பவம்!

ICC World Cup 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நிலையில், பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா களத்தில் செய்த மாஸ் சம்பவம் குறித்து இதில் காணலாம். 

 

  • Oct 14, 2023, 22:10 PM IST
1 /7

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி நடப்பு தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை இந்தியா வென்றது.   

2 /7

ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என பெருமையை தக்கவைத்தது. இதோடு, உலகக் கோப்பை தொடரில் 8 முறை பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது.   

3 /7

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 117 பந்துகளை மீதம் வைத்தும் வெற்றி பெற்ற நிலையில், நெட் ரன்ரேட் அதிகரித்துள்ளது. இதன்மூலம், நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்தது.   

4 /7

இந்தியாவின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணம் என்றாலும், பேட்டிங்கில் ரோஹித்தின் வெறியாட்டம் பலராலும் மறக்க முடியாது. 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்கள் அடித்தார்.  

5 /7

அதில் அவர் அடித்த சிக்ஸர்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிலையில், ரோஹித் சர்மா சிக்ஸ் அடித்த பின் கள நடுவர் மராயிஸ் எராஸ்மஸிடம் தனது 'Arms' காண்பித்து தான் பலசாலி என்பதுபோல் நகைச்சுவை செய்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.   

6 /7

முன்னதாக, எராஸ்மஸ் இன்று இரண்டு முறை தவறான முடிவை தெரிவித்தார். சௌத் சாகீல், ஹரிஸ் ராவுஃப் ஆகியோர் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகினார். ஆனால், இவற்றை எராஸ்மஸ் முதலில் நாட் அவுட் என அறிவித்த நிலையில், டிஆர்எஸ் மூலம் அவை அவுட் என அறிவிக்கப்பட்டது.  

7 /7

ரோஹித் சர்மா கடந்த போட்டியில் 131 ரன்களை அடித்த நிலையில், இன்று 86 ரன்களை அடித்து மொத்தம் 217 ரன்களை எடுத்துள்ளார். அதன்மூலம், நடப்பு தொடரில் இந்திய அணிக்கு அதிக ரன்களை அடித்தவராக அவர் உள்ளார்.