மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
ஆலுவேரா அளவிற்கு அதிகமானால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவில் ஏற்றத்தாழ்வுகள் எற்படலாம்.
அதிக அளவில் கற்றாழை சாறு உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கும் என்பதால், இதை அதிக அளவு பயன்படுத்துவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.
Aloe Vera-வில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுகிறது. இது வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஆலுவேரா சாற்றை அதிக அளவிற்கு எடுத்துக் கொண்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழை சாற்றை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது.
கற்றாழையில் காணப்படும் பயோ ஆக்டிவ் காம்பௌண்டுகள் கல்லீரல் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கல்லீரல் பிரச்சினை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி ஆலுவேரா சாற்றை அருந்தக் கூடாது.