Self-propelled Train: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, அதிவேகமாக சுயமாக இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 16 பெட்டிகள் கொண்ட சுயமாக இயக்கப்படும் ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் 160 கிமீ வேகத்தை வெறும் 140 வினாடிகளில் எட்டும். பயணிகளுக்கு சிறந்த வசதிகளைக் கொடுக்கும் இந்தியாவின் பெருமை மிகு ரயில் வந்தே பாரத்.
மேலும் படிக்க | ஒவ்வொரு வர்த்தகம் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு Paytm ஆல் இன் ஒன் POS
பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற அதிவேக ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்து, அதில் மாநில தலைநகரில் இருந்து அகமதாபாத் நகரில் உள்ள கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தார்.
காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ரயிலில் ஏறினார் பிரதமர்
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் தலைநகரங்களை இணைக்கும் இந்த ரயில், நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். இதுபோன்ற முதல் ரயில் புது தில்லி-வாரணாசி வழித்தடத்திலும், இரண்டாவது ரயில் புது தில்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா வழியிலும் தொடங்கப்பட்டது.
புதிதாக தொடங்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு விமானம் போன்ற பயண அனுபவத்தையும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பான கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கும்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் ரயில்வே அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
காந்திநகரில் காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கும் போது, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் பிரதமர் மோடி