கமல்ஹாசன் - H. வினோத் இணையும் KH 233 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

இன்னும் சில வாரங்களில் கமல்ஹாசன், இயக்குனர் எச்.வினோத்துடன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

 

1 /5

உலகநாயகனும் இயக்குனர் வினோத் இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் தலைமையிலான குழுவினருடன் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தினர்.  

2 /5

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நெல் ஜெயராமன் மற்றும் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்களுடன் கமல் மற்றும் வினோத் தீவிர கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.  

3 /5

'KH 233' படம் சமூக ரீதியாகப் பொருத்தமானதாகவும், ஒரு பெரிய விவசாயப் பிரச்சினையை பற்றி பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /5

இயக்குனர் வினோத், நடிகர் கமலிடம் இருந்து வெறும் 40 நாட்கள் கால்ஷீட் மட்டுமே இந்த படத்திற்கு வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

5 /5

மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் மற்றும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.