புதன் - சுக்கிரன் இணைவதால் தீபாவளி முதல் பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்!

செல்வத்தையும் சிறப்பையும் தருபவரான சுக்கிரன் அக்டோபர் 18ஆம் தேதி துலாம் ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மறுபுறம், கிரகங்களின் அதிபதியான புதன் கிரகம் அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. 

1 /4

ஜோதிட சாஸ்திரத்தில் லக்ஷ்மி நாராயண யோகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் ஏற்படும் இந்த யோகம் காரணமாக, குறிப்பிட்ட 3 ராசிகள், அபரிமிதமாக பண வரவை பெற்று பலன் அடைவார்கள். இந்த ராசிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்...

2 /4

கன்னி: லக்ஷ்மி நாராயணர் யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. நிலுவையில் உள்ள வேலைகள் இந்த நேரத்தில் நிறைவடையும். கடனில் சிக்கியிருந்த பணத்தை திரும்ப பெற முடியும். உங்கள் வணிகம் வெளிநாட்டுடன் தொடர்புடையதாக இருந்தால், நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில் தொழிலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனுடன் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

3 /4

தனுசு: இந்த யோகம் அமைவதால் வருமானத்தில் பெருகி, பண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். இந்த நேரத்தில் நீங்கள் பங்கு சந்தை மற்றும் பந்தயம், லாட்டரிகளில் பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில், வேலையில் உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உருவாகும். குடும்பத்தில் திருமணம், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறலாம். 

4 /4

மகரம்: லக்ஷ்மி நாராயண யோகம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைத் தரும். கைக்கு வராமல் தடைப்பட்டிருந்த பணத்தைப் பெறலாம். வியாபாரம் விரிவடையும். அதே நேரத்தில், பணியிடத்தில் உங்களின் திறன் மூலம் ஒவ்வொரு பணியையும் சிறப்பாக முடித்து பாராட்டினை பெறுவீர்கள். மேலும், இந்த நேரத்தில் உங்கள் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் உங்கள் பணியினால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.