வீட்டுல மணி பிளாண்ட் வெச்சிருக்கீங்களா? இந்த வாஸ்து குறிப்புகள் உங்களுக்கு உதவும்

Vastu Tips for Money Plant: வீட்டில் அழகு மற்றும் பசுமையை மேம்படுத்த சிறிய மரங்கள் மற்றும் செடிகளை வைப்பது வழக்கம். பலர் தங்கள் வீடுகளில் மணி பிளாண்ட்டை வைக்கிறார்கள். சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால், அன்னை லக்ஷ்மி கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வருவதற்குப் பதிலாக, நிதி நெருக்கடி ஆரம்பமாகும் என சொல்லப்படுகின்றது. மணி பிளாண்ட் தொடர்பான சில முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

 

1 /6

வீட்டில் ஒரு மணி பிளாண்ட்டை வைத்தால், எந்தவொரு நிதி நெருக்கடியும் இருக்காது என்றும் குடும்பம் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. நீங்களும் வீட்டில் மணி பிளாண்டை வைக்க விரும்பினால், சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். 

2 /6

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மணி பிளாண்டை கிழக்கு-மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இப்படி செய்வதால், வீட்டில் சிக்கல் அதிகமாகிறது. அதற்கு பதிலாக, மணி பிளாண்டை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். விநாயகப் பெருமான் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். 

3 /6

மணி பிளாண்டின் இலைகள் அல்லது கிளைகள் காய்ந்தால், அவற்றை வெட்டி பிரிக்க வேண்டும். இலைகள் மற்றும் தண்டுகளை நீங்களே வெட்டுவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு நண்பரைக் கொண்டு வெட்ட சொல்லுங்கள். யார் வீட்டில் மணி பிளாண்ட் உள்ளதோ, அந்த வீட்டின் நபரே அதன் இலைகள் மற்றும் கிளைகளை வெட்டக்கூடாது.

4 /6

மணி பிளாண்டிற்கு எப்போதும் வடிகட்டிய நீரை ஊற்றவும். இந்த செடிக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் ஊற்றும்போது இலைகளில் சிறிது தண்ணீர் தெளிக்கவும். மணி பிளாடிற்கு அதிக தண்ணீர் சேர்த்தால், அதன் இலைகளால் உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக அதன் இலைகள் மஞ்சள் நிறமாகி கீழே விழ ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் மணி பிளாண்டிற்கு உரமிடக்கூடாது.   

5 /6

வீட்டிற்குள் ஒரு மணி பிளாண்டை வைக்கும்போது, தொட்டியின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்குக் காரணம் மணி பிளாண்ட் செடி வேகமாக வளர்வதுதான். ஆகையால், அதன் வேர்கள் கீழே பரவவும் இடம் தேவை. தொட்டியின் அளவு சிறியதாக இருந்தால், ​​வேர்கள் விரிவடைய இடம் கிடைக்காது. இது செடியின் வளர்ச்சியை பாதிக்கிறது.  

6 /6

மணி பிளாண்டை எப்போதும், வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டிற்குள் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் வருகிறது. செடியை வீட்டிற்குள் யாரும் நேரடியாக பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைத்தால், அதன் நேர்மறையான விளைவு முடிவடைந்து, நல்ல விளைவுகள் ஏற்படுவதற்கு பதிலாக சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கும். (குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)