எக்கச்சக்க ஆப்பர்களில் கிடைக்கும் OnePlus மொபைல்கள்... எங்கு, எப்போது வாங்கலாம்?

OnePlus Community Sales: ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus Community Sales விற்பனையை இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. அதில் எந்தெந்த மொபைல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது, இந்த தள்ளுபடிகளை எங்கு பெறலாம், இந்த தள்ளுபடிகள் எப்போது தொடங்கும் என்பதை இதில் காணலாம். 

  • Jun 05, 2024, 22:24 PM IST

OnePlus நிறுவனத்தின் இந்த தள்ளுபடி விற்பனையில் பல மொபைல்கள் வழக்கத்தை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. 

 

 

1 /8

OnePlus நிறுவனத்தின் இந்த ஆப்பர் ஜூன் 6ஆம் தேதி முதல் வழக்கத்திற்கு வருகிறது. இதனை நீங்கள் Reliance Digital, Bajaj Electronics, Vijay Sales, Croma மற்றும் பிற ஆப்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.   

2 /8

இதில் OnePlus 12, One Plus 12R, OnePlus Open, OnePlus Nord CE4 ஆகியவை ஆப்பரில் கிடைக்கிறது.   

3 /8

இதில் OnePlus Open எனும் மடக்கி திறக்கும் ஸ்மார்ட்போனும் ஆப்பரில் கிடைக்கிறது. இது ஒரே ஒரு வேரியண்டில் வருகிறது. 16ஜிபி RAM மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.     

4 /8

OnePlus Open மொபைலின் அசல் விலை ரூ.1,39,999 ஆகும். இதனை நீங்கள் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, OneCard, BOBCARD, IDFC First Bank ஆகிய வங்கி கார்டுகளின் மூலம் வாங்கினால் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. எனவே, இதனை ரூ.1,34,999 என்ற விலையில் வாங்கலாம்.     

5 /8

OnePlus Nord CE 4: இந்த மொபைல் இரண்டு வேரியண்ட்டில் வருகிறது. 8+128ஜிபி வேரியண்ட் 24 ஆயிரத்து 999 ரூபாயாகும். 8+256ஜிபி வேரியண்ட் 26,999 ரூபாயாகும். இதில் 2,000 ரூபாய் வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது.     

6 /8

OnePlus 12 5G: இந்த மொபைலை வாங்குபவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 12+256ஜிபி வேரியண்ட் 64,999 ரூபாய் மற்றும் 16+512ஜிபி வேரியண்ட் 64 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இதில் மேலே சொன்ன தள்ளுபடிகள் சேர்ந்தால் இந்த வேரியண்ட்களை முறை 59,999 ரூபாய்க்கும், 64,999 ரூபாய்க்கும் வாங்கலாம்.   

7 /8

OnePlus 12 5G இந்த மொபைலுக்கு ரூ.12 ஆயிரம் வரையில் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் கிடைக்கிறது. எனவே, 12+256ஜிபி வேரியண்டை 47,999 ரூபாய்க்கும், 16+512ஜிபி வேரியண்டை 52,999 ரூபாய்க்கும் வாங்கலாம்.   

8 /8

OnePlus 12R: இந்த மொபைலுக்கு 2 ஆயிரம் ரூபாய் வங்கி தள்ளுபடியாகவும், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ் ஆப்பரில் 6 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. எனவே, இந்த மொபைலில் நீங்கள் 8+128ஜிபி வேரியண்டை 29,999 ரூபாய்க்கும், 8+256ஜிபி வேரியண்டை 32,999 ரூபாய்க்கும், 16+256ஜிபி வேரியண்டை 35,999 ரூபாய்க்கும் வாங்கலாம்.